AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 18 பிப்ரவரி, 2012

ஹஜ் கொள்கை:மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!


புதுடெல்லி:ஹஜ் மானியம், அரசு பிரதிநிதிகள் குழு, தனியார் ஆபரேட்டர்களுக்கான ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் கொள்கையை விளக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வருகிற 24-ஆம் தேதி அட்டர்னி ஜெனரல் நேரடியாக ஆஜராகவேண்டும் என்று நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனா பிரசாத் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். பிரதிநிதிக் குழுவை ஹஜ் கிரியைகளின் ஒரு பகுதியா? அது தேவைதானா? இது எப்பொழுது துவங்கியது?எவ்வளவு உறுப்பினர்கள் பிரதிநிதிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்?அரசு ஒதுக்கீடு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது? எந்த சூழலில் ஹஜ் மானியம் வழங்கப்படுகிறது? தனியார் டூர் ஆபரேட்டர்கள் புனித பயணிகளை மோசடி செய்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்துள்ள சூழலில் அதனை தொடரவேண்டுமா? எந்த அளவுகோலை உபயோகித்து ஹஜ் புனித பயணிகளை ஹஜ் கமிட்டி தேர்வுச் செய்கிறது? ஆகிய விஷயங்களில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 40 ஹஜ் தனியார் ஆபரேட்டர்கள் மத்திய அரசின் ஹஜ் கொள்கை காரணமாக தாங்கள் நிராகரிக்கப்பட்டதா சுட்டிக்காட்டி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து இவ்வழக்கு துவங்கியது. மத்திய அரசிடம் மீதமுள்ள 800 இடங்களை மனுதாரர்களுக்கும், தகுதியில்லாதவர்கள் என நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் அளிக்கவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் ஹஜ் கொள்கையை பரிசோதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக