AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 18 பிப்ரவரி, 2012

டெல்லி,மும்பை வாழ்க்கை செலவுகள் குறைவான நகரங்கள்!


புதுடெல்லி:பொருளாதார,ஆட்சி மையங்களாக திகழும் இந்திய நகரங்களான மும்பை, டெல்லி ஆகியன உலகில் வாழ்க்கை செலவுகள் குறைவான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
எக்னாமிக்ஸ் இண்டலிஜன்ஸ் யூனிட் உலகமுழுவதும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மும்பை 2-வது இடத்தையும், புதுடெல்லி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. கராச்சி முதல் இடத்தை வகிக்கிறது. ஈரானின் தலைநகரான டெஹ்ரான் முதல் நான்கில் இடம் பிடித்துள்ளது. இவற்றைத் தவிர மஸ்கட், டாக்கா, அல்ஜீர்ஸ், காட்மாண்டு, பனாமா சிட்டி, ஜித்தா ஆகிய நகரங்களும் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஸூரிச் வாழ்க்கை செலவு கூடிய நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோ, ஜெனீவா, ஒஸாகா கோபே, ஆஸ்லோ, பாரிஸ், சிட்னி, மெல்பர்ன், சிங்கப்பூர், ப்ராங்க்ஃப்ர்ட் ஆகிய நகரங்களும் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
உணவு, குடிநீர், ஆடை, வீட்டு வாடகை, போக்குவரத்து, கல்வி ஆகியவற்றை அளவுகோல்களாக வைத்து இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. விலை குறைப்பு நடவடிக்கைகள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் வாழ்க்கை செலவு குறைந்துள்ளதாக சர்வே கூறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக