AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 18 பிப்ரவரி, 2012

மாணவர்கள்,பெற்றோர்களுக்கு நேர்காணல்-பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது, மாணவர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ, நேர்காணல் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என  பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதன்படி விதிகளை மீறிபவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்பது குறித்தும் வெளியிட்டுள்ளது,
அதன்படி, மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தேர்வு எதையும் நடத்தக் கூடாது. இந்த விதியை மீறினால் பள்ளிகளுக்கு முதலில் ரூ. 25 ஆயிரமும், அதன்பிறகு இந்தத் தவறு நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும்.
மேலும் அந்தந்த கல்வியாண்டு துவங்கி  6 மாதம் வரை குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கலாம் எனவும் நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைக்கு சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக