AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 18 பிப்ரவரி, 2012

பிப் 19-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

கடலூர் மாவட்டத்தில் வரும் 19-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் வரும் 19 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாள்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக மேற்கண்ட நாள்களில், கடலூர் மாவட்டத்தில் 1,613 சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்படும். இந்த முகாம்களில் சுமார் 6,452 களப் பணியாளாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். 5 வயதுக்கு உள்பட்ட 2,46,732 குழந்தைகளுக்கு இம்முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், மேற்கண்ட நாட்களில், ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து கொடுத்திருந்தாலும், தவறாமல் மீண்டும், சொட்டு மருந்து அளிக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்கண்ட நாட்களில் முகாமிற்கு அழைத்து வந்து, சொட்டு மருந்து புகட்ட வேண்டும்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இந்த நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம், போலியோ சொட்டு மருந்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, அவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள உதவ வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக