AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 31 ஜனவரி, 2012

இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வழக்கு.சாமி மன்னிப்பு கடிதம்

"இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.


"இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை  முன்பு சுப்ரமணிய சாமி எழுதியிருந்தார். இதற்கு  இந்திய முஸ்லிம்களிடையே  கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சு.சாமியின் மதத்துவேஷம் காரணமாக, தனது பல்கலைகழகத்தில் பாடம் எடுப்பதற்கும் ஹார்வர்ட் பல்கலைகழகம் தடை விதித்தது. துவேஷக் கருத்து எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இவ்வழக்கில் சுப்ரமணிய சாமி பிணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.  நீதிபதி முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கிய நீதிபதி, "கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 அபராதம் செலுத்தி பிணையில் வெளிவரலாம்" என்று அவருடைய மனுமீது தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக