AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 30 ஜனவரி, 2012

புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ.1000 கோடியில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள்-ஆளுநர்


சென்னை: தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ. 1000 கோடி செலவில் 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்தார்.
2012ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கியது. இறை வணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. முன்னதாக அவைக்கு வந்த ஆளுநர் ரோசய்யாவை, சபாநாயகர் ஜெயக்குமார், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். ரோசய்யாவுக்கும் இதுதான் தமிழக சட்டசபையில் ஆற்றவுள்ள முதல் உரையாகும்.
இதையடுத்து ஆளுநர் ரோசய்யா தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அவர் கூறுகையில், தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக அரசு புயல் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாகவும், தீவிரமாகவும் மேற்கொண்டு வருகிறது.
அந்த இரு மாவட்டங்களிலும் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகளை அரசு கட்டித் தரும். இந்தத் திட்டம் ரூ. 1000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
அண்டை மாநிலங்களுடன் தமிழக அரசு நல்லுறவைப் பேணி வருகிறது.
தமிழகத்தில் மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாகவும், முனைப்புடனும் செயல்படுத்தி வருகிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்துவதிலும் தமிழக அரசு உறுதியுடன் செயல்படுகிறது.
அரசு-தனியார் நிதிக் கொள்கை
முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி ஏற்படுத்தப்படும். மேலும் இவற்றை செயல்படுத்த அரசு-தனியார் நிதி ஆதாரம் ஒருங்கிணைக்கப்படும். மேலும் ஒகருங்கிணைந்த அரசு-தனியார் நிதிக் கொள்கையும் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் விலையில்லாத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசு தீவிர அக்கறை காட்டுகிறது. அவற்றை உரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:
- இரண்டாம் பசுமைப் புரட்சி தேவை: விவசாய வேளாண் உற்பத்தியை பெருக்க திட்டம். வரும் ஆண்டில் விவசாய வேளாண் உற்பத்தி 100 லட்சம் டன்னைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு இது 75.95 டன்னாக இருந்தது.
- தமிழகத்தில் அரசு அலுவலங்கள் செயல்படும் பழைமையான, தொன்மையான கட்டடங்களின் உறுதித்தன்மையை உறுதி செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- நிலப்பறிப்பு தொடர்பாக ஏழைகளை மிரட்டிப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை தொடரும்.
- 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 1லட்சத்து 85ஆயிரம் கோடியாக உள்ளது. 11 வது ஐந்தண்டு திட்டத்தில் 85 ஆயிரம் கோடியாக இருந்தது.
- திட்டங்களை வடிவமைக்கும் போது மத்திய அரசு அதனை சுட்டிக் காட்டினால் போதும். மாநிலங்களே அவற்றின் விதிகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு சுதந்திரம் தர வேண்டும்.
- மத்திய ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். இதற்காக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
- உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிந்து தனியார் – அரசு கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும்.
- கிராமப்புற ஏழ்மை போக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப் புறங்களில் ஏழ்மையை நீக்குவதற்கு விரிவான திட்டம் உருவாக்கப்படும். வறுமை நிலையை தீர்க்க ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
- வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த, முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். தொழில்துறை மற்றும் அரசுத் துறை இணைந்து இந்த ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
- மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகம் மின்சாரம் கேட்டதற்கு மத்திய அரசு பாராமுகமாக இருப்பதால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- பொறியியல் மருத்துவம் போன்ற உயர்நிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் மாணவர் நலனுக்கு பாதிப்பு என்பதால் இதனை எதிர்க்கிறோம்.
- பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகளை நீண்டகாலம் தாக்குபிடிக்கும் வலுவான சாலைகளாக, நீடித்த சாலைகளாக அமைக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக