AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஐஐடியில் கேம்பஸ் இன்டர்வியூ!! – ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ 68 லட்சம் சம்பளம்


பேஸ்புக் உள்பட 225 நிறுவனங்கள் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறது : ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ 68 லட்சம் சம்பளம்…
Facebook
ஐஐடியில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுகிறது. இதில், 225 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 1100 மாணவர்களும் பங்கேற்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்று வருகிறது.http://www.kalvikalanjiam.com
2 மாதங்களுக்கு இந்த கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற இருக்கிறது. இதில், 225 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்கின்றன.
1,100 மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். நேற்று நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் 15 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 35 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜப்பான் நிறுவனமான சோனி 5 மாணவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.30 லட்சம் சம்பளத்தை இந்நிறுவனம் தரவுள்ளது.
மேலும், செல்போன் கேம்ஸ் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான பாக்கெட் ஜெம்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.68 லட்சம் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது.
அதேபோல, சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனமும் ஆண்டுக்கு ரூ.68 லட்சம் சம்பளம் தர முன்வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக