AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 15 நவம்பர், 2011

கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் வேலைக்கேற்ற முக்கிய பிரிவுகளை பற்றி கூறவும்? – கேள்விபதில்


கல்வி களஞ்சியத்தின் சேவைகள் மற்றும் புதிய முயற்சிகள் தொடர எனது வாழ்த்துகள்.
எனது மகன் கம்ப்யூட்டரில் ஆர்வம் உள்ளவனாக இருக்கின்றான், கம்ப்யூட்டரில் அடிப்படை ஆர்வம் இருப்பவருக்கு அது தொடர்பாகவே ஒரு வேலை கிடைப்பது என்பது இன்று எளிதாக மாறியிருக்கிறது. பொதுவாக இதில் என்ன வேலைகள் உள்ளன தெரியுமா?
- முஹமத் அன்வர், துபாய்
computer-jobs
Computer-Jobs
உங்களின் விமர்சனங்களுக்கு நன்றி, உங்களின் கேள்விக்கு பலருக்கும் பயன் அடையும் வகையில் பதிலை அமைத்துள்ளோம்.
கம்ப்யூட்டர் வேலை தொடர்பான முக்கிய பாடப்பிரிவுகள் தலைப்பு வாரியாக
டெக்னிகல் சப்போர்ட் – Technical Support:
ஒரு நிறுவனத்தின் அடிப்படை மற்றும் பிற செயல்பாட்டுக்கு உதவும் டெக்னிகல் பணிகள். அதாவது நெட்வொர்க்கிங், மெயின்டனன்ஸ், டிரபிள் சூட்டிங் போன்ற பணிகள்.http://www.kalvikalanjiam.com
செக்யூரிடி சிஸ்டம், சாப்ட்வேர், ஹார்ட்வேர் பிரச்னைகள், இன்டர்நெட் கனெக்டிவிடி, இன்ட்ராநெட் பயன்பாடு, சர்வர்களை நிர்ணயித்து பராமரித்தல் போன்ற பல பணிகளை இந்த பிரிவின் கீழ் குறிப்பிடலாம்.
புரொகிராமர் – Programmer:
கோட்களை எழுதுவது, புரொகிராமிங், கம்ப்யூட்டர் லாங்வேஜ் போன்றவற்றில் அதிக ஆர்வமுடையவருக்கு புரொகிராமர் பணியிடங்கள் மிகப் பொறுத்தமானவை. இவர்களுக்கு சிஸ்டம் புரொகிராமர் பணிகள் மிகவும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்களுக்குப் பொருத்தமான புரொகிராம்களை எழுதுவது, வெப் புரொகிராமர், அப்ளிகேசன்ஸ் புரொகிராமர் என இதில் பல பணிகள் உள்ளன.
வெப் டிசைனர் – Web Designer:
வெப் டிசைன், வெப் டெவலப்மென்ட், டிஜிடல் கிராபிக் டிசைன், டிஜிடல் அனிமேசன் போன்ற பல வெப் பணி வாய்ப்புகள் இன்றையச் சூழலில் உள்ளன. கிரியேடிவ் ஆர்வமும் திறனும் உள்ளவர்கள் இதைப் படிக்கலாம். கோரல் டிரா, அடோப் இல்லஸ்டிரேட்டர், போட்டோஷாப், இன் டிசைன், அடோப் பேஜ்மேக்கர் போன்ற சாப்ட்வேர்களில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவருக்கு இது பொருத்தமான துறையாக அமையும்.
அனிமேட்டர் – Animator:
நகரும் உருவங்களை கம்ப்யூட்டர்களில் வடிவமைப்பதில் ஆர்வமுடையவராக இருந்தால் அனிமேþன் உங்களுக்கான துறை என்பதில் சந்தேகமில்லை. 2டியில் அடிப்படையைப் பெற்று விட்டால் இத் துறையில் வேகமாக முன்னேறலாம்.
பிற பிரிவுகள் –  Other Departments:
முதலில் எஸ்.கியூ.எல்லை படித்து, அப்படியே ஆரக்கிளை அறிந்து கொண்டு, ஜாவாவிற்கு நகர்ந்து எக்ஸ்.எம்.எல்லை கற்றுக் கொண்டு C++ஐயும் நன்றாக தெரிந்து கொண்டால் இதன் மூலமாக சிறப்புப் பணி வாய்ப்புகளை பெற முடிகிறது.நாம் என்னதான் நல்ல படிப்பாகப் படித்தாலும் படிப்பை விட நமது அடிப்படைத் திறன்களே நமக்கான வளமான துறையை உறுதி செய்கிறது.
பொதுவாகவே எந்த படிப்பானாலும் அதில் சாப்ட்வேர், டூல்ஸ், அப்ளிகேசன்ஸ் போன்றவை தான் நமக்குக் கற்றுத் தரப்படுகின்றன. டிசைனிங்கின் அடிப்படைகள் கற்றுத் தரப்படுவதில்லை. நமது திறனின் தரமே நமக்கான சம்பளத்தையும் நல்ல பணி வாய்ப்பையும் நமக்குத் தருகின்றன.
வெப்சைட்டுகளில் பணிபுரிய ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல்., மேக்ரோமீடியா டிரீம்வீவர், பிளாஸ் போன்றவற்றில் சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன்களுக்கான சாப்ட்வேர்களை தயாரிப்பதற்கும் திறனுள்ள நபர்கள் ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள்.
எனவே கம்ப்யூட்டர் நிறுவனங்களில் படிப்பவர்கள் தாங்கள் படிக்கும் படிப்பானது சமீபத்திய வெளியீடு தானா என்பதை கட்டாயம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக