AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 15 நவம்பர், 2011

Memory power – அதிகப்படுத்த சில டிப்ஸ்!!


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.
அதற்கான வழிகள்:-
அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:
நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.
நன்கு தூங்குங்கள்:
தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.
தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.
வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:
ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.http://www.kalvikalanjiam.com
எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:
பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:
குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள்.
எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.
நினைவூட்டும் தந்திரங்கள்:
ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக