AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 15 நவம்பர், 2011

புதிய பாடத்திட்டம் அறிமுகம்!! – அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்


அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு, நவீன புதிய தொழிற்நுட்பத்துடன் கூடிய பாடத்திட்டம், வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என, பல்கலை., துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
தமிழக அரசு மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப்களை வழங்கி வருகிறது. அதனை எப்படி பயன்படுத்துவது, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன போன்ற விவரங்களை மாணவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதுபற்றிய பயிற்சி முகாம், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. பல்கலை., துணைவேந்தர் மன்னர் ஜவஹர், முகாமை துவக்கி வைத்தார்.
நந்தனம் அரசு பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் பலர் பங்கேற்றனர். பயிற்சி முகாமிற்கான ஏற்பாட்டினை, பல்கலைக்கழக., என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளரான இயற்பியல் துறை பேராசிரியர் செல்லதுரை செய்திருந்தார்.
இந்த பயிற்சி முகாம், ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
இது குறித்து, துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியதாவது: தமிழக அரசு இலவச லேப்-டாப்களை வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்துவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கு லேப்-டாப்களின் செயல்பாடு பற்றி கற்றுத் தருகின்ற ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்.
வரும் கல்வியாண்டில், அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதில், இன்றைய சூழ்நிலையில் உள்ள நவீன தொழிற் நுட்பங்கள் இடம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக