AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 8 நவம்பர், 2011

சிரியா ஒப்பந்தத்தை மீறினால் பெரும் துயரத்தை சந்திக்கவேண்டிவரும்:அரப் லீக் எச்சரிக்கை


கெய்ரோ:பிரச்சனைகளை தீர்க்க தாங்கள் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறினால் சிரியா பெரும் துயரத்தை சந்திக்கவேண்டிவரும் என அரபு  லீக் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவிலியன்களை கொலைச் செய்வதை நிறுத்திவிட்டு கடந்த வாரம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள பஸ்ஸாருல் ஆஸாதின் அரசு தயாராகவேண்டும் என அரபு லீக்கின் தலைவர் நபீல் அல் அரபி தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு ஏற்படும் துயரம் பிராந்தியத்தை மொத்தமாக பாதிக்கும். ஆகையால் சிரியா அரசு பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். சிவிலியன்களை பாதுகாப்பதற்கும், எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்கள் தயாராகவேண்டும்.பிரிவினை மோதல்களை நோக்கி சிரியா செல்ல வாய்ப்புள்ளது என நபீல் அல் அரபி கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஹும்ஸில் ராணுவம் ஆறுபேரை படுகொலைச்செய்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமைக்கு பிறகு 80 பேர் சிரியாவின் அக்கிரம ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.சனிக்கிழமை மட்டும் 22 பேர் மரணித்துள்ளனர்.இச்சூழலில் அரபு லீக்குடன் சிரியா அரசு மேற்கொண்ட அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக