AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 20 அக்டோபர், 2011

திருச்சி மேற்கு இடைத்தேர்தல் : அதிமுக வெற்றி!

திருச்சி: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14,608 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி  பெற்றுள்ளார். மொத்தம் 18 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 68,804 வாக்குகளும், திமுக வேட்பாளர்  கே.என்.நேரு 54,196 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

திருச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட 5 தபால் ஓட்டுகள் தி.மு.க    வேட்பாளர் கே.என்.நேருவுக்கே கிடைத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. திருச்சி மேற்கு   தொகுதி இடைத்தேர்தல் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் 2.08 லட்சம் வாக்காளர்களில் 1,27,455 பேர் வாக்களித்தனர். இதில் ஆண்கள் 63, 360, பெண்கள் 64 ஆயிரத்து 95 பேர். சதவீதம் 61.15 ஆகும். 

14 சுயேட்சைகள் டெபாசிட் இழப்பு!

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட 14 சுயேட்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இத்தேர்தலில் தேமுதிக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை. அதிமுகவின் பரஞ்சோதி, திமுக வின் நேரு இடையே நேரடி போட்டி நிலவியது.  

2வது முறையாக சட்டசபை செல்கிறார் பரஞ்சோதி!
 
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் 2வது முறையாக சட்டசபை செல்கிறார். ஏற்கனவே 2001&06 ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் பரஞ்சோதி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக