சென்னை: தமிழகத்தில் 2ம் கட்டமாக நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 467 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மாதம் 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 19,646 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு லட்சத்து 12,759 பதவியிடங்களுக்கான பதவியிடங்களுக்கு 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. அதன்படி, கடந்த 17ம் தேதி முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர் தல் நடந்தது. இதில் 77.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
65 மாநகராட்சி, 270 பேரூராட்சி, 194 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு, நேற்று 2ம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலிலும் சுமார் மூன்று கோடி பேர் வாக்களித்தனர். கிராமப் பகுதிகளில் மட்டும் இரண்டு கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, நீலகிரி தவிர மற்ற 30 மாவட்டங்களில் நேற்று 2ம் கட்ட தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த இடங்களில் மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். நேற்று நடந்த தேர்தல் பொதுவாக அமைதியாகவே நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
கரூரில் அதிகம்
குமரியில் குறைவு
2&ம் கட்ட வாக்குப் பதிவு விவரம் வருமாறு:
நகர்ப்புற உள்ளாட்சிகளில் 76 சதவிகிதம், பேரூராட்சிகளில் 78 சதவிகிதம், ஊராட்சிகளில் 82 சதவிகிதம் வாக்கு பதிவானது.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 88 சதவிகிதம், குறைந்தபட்சமாக குமரி மாவட்டத்தில் 70 சதவிகிதம் வாக்கு பதிவாகியுள்ளது.
இறுதியாக 2ம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், மொத்தம் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 17ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள், நேற்று நடந்த 2ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள், வன்முறை சம்பவங்களால் இன்று மீண்டும் நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் என அனைத்தும், வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு ஒரே கட்டமாக எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அய்யர் தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் முடிவுகள் விவரம், நாளை காலை 11 மணிக்கு மேல் வெளியாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக