உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம் எது? என்பது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அதற்காக “டுவிட்டர்” இணைய தளம் பயன்படுத்துபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 84 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அவர்கள் 2 வருடங்களாக 50 கோடியே 90 லட்சம் கருத்துக்களை கூறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலைப் பொழுதுதான் மகிழ்ச்சியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்போதுதான் மக்களின் அன்றாட பணி தொடங்குகிறது. அதே போன்று நள்ளிரவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளனர்.
அதே வேளையும், நள்ளிரவுக்கு மேலே மிகவும் எரிச்சலான நேரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பயம், கோபம், குற்ற உணர்வு, கடும் வெறுப்பு, போன்றவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக