AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 6 அக்டோபர், 2011

ருத்ராபூர் கலவரம்:அக்கறையின்றி செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி நீக்கம்


டெல்லி:உத்ரகாண்டின்,உதம் சிங் நகரில் உள்ள ருத்ராபூரில் அக்டோபர் 2-ஆம் நாள் புனித குர்ஆன் அவமதிப்புத் புகாரின் மீதான காவல்துறையின் ஒருதலை பட்ச நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் ஹிந்துத்துவாதிகளுடன் சேர்ந்து செய்த அத்துமீறல் மற்றும் வன்முறையில் 4பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தில் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டும், வாகனங்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.  
இச்சம்பவத்தில் அக்கறையின்றி நடந்துக் கொண்ட அம்மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரிகளான டி.ஐ.ஜி. அமித் ஷர்மா, டி.எம் பி.பி.ஆர் புருஷோத்தம் மற்றும் எஸ்.எஸ்.பி அபினவ் குமார் மோர்டோலியா ஆகியோரை உத்ரகாண்ட் அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது.
உத்திரகான்ட் அரசின் இந்த முடிவுக்கு திருப்தியடையாத முஸ்லிம் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும்,மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பட்ச உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 
தொடர்ந்து குழப்பத்திலும், பீதியிலும் இருக்கும் ருத்ராபூரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், அங்கு வணிக நோக்கிற்காக வந்தவர்கள் வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர். மேலும் உண்ண உணவின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியை முஸ்லிம் தலைவர்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுபடுத்த இரு மதத்தைச் சார்ந்தவர்களையும் காவல்துறை கைது செய்தாலும், எண்ணிக்கையில் முஸ்லிம்களை மிஞ்சவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு இச்சம்பத்தில் மரணம் அடைந்த குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும், காயம் அடைந்தோருக்கு உதவி தொகை பின்னர் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக