மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாள ர்கள் களமிறங்கி கலக்கி வருகிறார் கள். முஸ்லிம்கள், இந்துக்கள், தலித்துக்கள், கிருத்தவர்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கி சமூக நீதியை ம.ம.க நிலை நாட்டியுள்ளது.
போட்டியிடும் 6 நகராட்சிகளில் கூத்தாநல்லூர் நகராட்சியை ம.ம.க திருவாரூர் மாவட்ட துணைச்செயலாளர் பிரபுதாசுக் கும், போட்டியிடும் 15 பேரூராட்சிகளில் சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை தஞ்சை(வ) மாவட்ட மமக துணைச் செயலாளர் சரவணனுக்கும், காட்டுமன்னார்குடி பேரூராட்சி தலைவர் பதவியை இன்ஜினியர் விமல்ராஜுக்கும் ஒதுக்கியுள்ளது.
ஊராட்சி மன்றம் உள்ளிட்ட மற்ற பல பதவிகளுக்கும் இதே போன்று பல்வேறு சமூக மக்களுக்கும், மமக சார்பில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 73 பெண்களுக்கு பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெகிழ்வுமிக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரில் முஸ்லிம்கள், நாயுடுகள், கவுண்டர்கள் சம அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு ஊராட்சி மன்றத்திற்கு 2&வது வார்டில் மமக சார்பில் சம்சாத் பேகம் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாய மக்கள் திரண்டு வேறு யாரும் இங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யக்கூடாது என அறிவித்தனர். மீறி போட்டியிட்டால் அவர்களைத் தோற்கடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
சமீபத்தில் அவ்வூரில் உள்ள ஒரு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மமக மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் இரத்ததானம் செய்துள்ளார். அதேபோல கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிளைத் தலைவர் ஹாஜா ரத்ததானம் செய்துள்ளார்.
சோதனையான நேரத்தில் தங்களுக்கு உயிர் காக்கும் உதவிகளை செய்த கட்சியினர் தேர்தலில் நிற்பதை அறிந்ததும் அவர்கள் உணர்வுப் பூர்வமாக நன்றியை வெளிக்காட்ட முடி வெடுத்தனர். இதே வார்டில் நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாயங்களைச் சேர்ந்த பலரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தங்கள் சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்ட அவர்கள், மமக வேட்பாளருக்கு ஆதரவாக வாபஸ் பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டமெங்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதிபலன் பார்க்காமல் நாம் எப்போதோ செய்த மனிதநேயப் பணிகளை நினைத்துப் பார்க்கும் பொதுமக்கள் மமக வேட்பாளர் களை உணர்வுபூர்வமாக ஆதரிக் கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
மமகவின் லட்சிய முழக்கங் களான சமூகநீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் ஆகியன இப்போது களத்தில் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக