AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 11 அக்டோபர், 2011

லால்பேட்டை மக்களூக்கு மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை…!


லால்பேட்டை, அக்-11/
/
லால்பேட்டை பேரூராட்சி தலைவர், உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி 10.10.2011 திங்கள் மாலை லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோடு மற்றும் கீழத் தெரு கடை வீதியில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
/
பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் யாசர் அரபாத் மற்றும் வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார்.அப்போது லால்பேட்டை மக்களூக்கு மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.
/
1. வெளிப்படையான நிர்வாகம், துரித செயல்பாடுகள், நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றை காப்பாற்றும் வகையிலும்; லால்பேட்டை பேரூராட்சிக்கு வழிகாட்டும் வகையிலும் “மக்கள் கண்காணிப்புக்குழு” ஒன்று அமைக்கப்படும். அதில் பொது மக்கள் இடம் பெறுவர்.
/
2. ஒப்பந்தக்காரர்களிடம் கமிசன் கோரமாட்டோம்.
/
3. லால்பேட்டை பேரூராட்சிக்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட்டு பணிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படும்.
/
4. குறுந்தகவல்(sms) மின்னஞ்சல்(e-mail) மூலம் புகார்கள் பெற்று துரித நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்படும்.
/
5. 24 மணிநேரமும் மக்கள் சேவைக்கு தயார் நிலையில் பேரூராட்சியின் செயல்பாடுகள் இருக்கும்.
/
6. ஒவ்வொரு மன்றக் கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு மக்கள் குறைகளை எடுத்து வைத்து தீர்வு காண்போம்.
/
7. ஏழைகளுக்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் அவசர கால சேவை என பொதுமக்களின் நலன்களுக்காக எந்நேரமும் உழைப்போம்.
/
8. இலவச சட்ட உதவிகள், குடும்ப அட்டைகளை விரைந்து பெற்று தருவது, அரசு அலுவலகங்களை அணுகி மக்கள் குறைகளை களைவது என பணிகள் விரிவுபடுத்தப்படும்.
/
9. வீதிகள் தோறும் புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகளை சீர் செய்தல், கழிவு நீர் சாக்கடைகளை சுத்தம் செய்வதோடு புதியதாக வடிகால் வசதிகளும் செய்து தரப்படும்.
/
10. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள், வங்கி கணக்கு துவங்குவது மற்றும் ஆபத்து கால காப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்று தரவும் உதவி செய்வோம்.
/
11. பேரூராட்சியின் வீண் செலவுகளை குறைத்து வருவாயை உயர்த்துவோம்.
/
12. நாய், பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்துவோம்.
/
13. இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் பெற்றுத்தரப்படும்.
/
14. மின்விளக்கு, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மக்கள் தரும் புகார்களின் மீது 24 மணி நேரத்தில் தீர்வு கிடைக்க ஆவண செய்வோம்.
/
15. லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நமதூரில் அரசு மருத்துவமனை அமைக்க முழு மூச்சில் பாடுபடுவோம்.
/
16. மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் இலவச உதவிகளை மக்களுக்கு விரைந்து பெற்றுத்தர ஆவண செய்வோம்.
/
17. நமதூரில் உள்ள கேணி, குளங்களில் கழிவு நீர் சேராமல் பாதுகாத்து சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
/

இன்னும் நீங்கள் எதிர்பார்ப்பதும், அதற்கு மேலும் ……இஇறைவன் நாடிநால்;…     thanks  lalpetxpress
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக