
சென்னை, செப்.4-
உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளை விட தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கை பொறுத்தும் வெற்றி வாய்ப்புகள் அமையும். எனவே சுயேச்சைகளாக பலர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் வெளியாகி உள்ளன.
போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.
21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பில் ஊழியராக இருக்க கூடாது.
அரசு ஊழியராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் 5 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டவர் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலையான நாளில் இருந்தும் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
ஆரோக்கிய குறைவான மனநிலை, காது கேளாத, வாய்பேச இயலாதவர்களாக இருப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
திவாலானவராக அறிவிக்கப்பட்டவர் போட்டியிட முடியாது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த வகையிலும் நிலுவைத் தொகை செலுத்த தவறி இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
ஊராட்சியின் சார்பில் சம்பளம் பெற்று பணியாற்றும் சட்ட ஆலோசகர் உள்ளாட்சிக்கு எதிராக பணியாற்றும் சட்ட தொழிலாற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
ஆரோக்கிய குறைவான மனநிலை உள்ளவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் வாக்களிக்க இயலாது.
தேர்தல் குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவரும் வாக்களிக்க முடியாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக