புது தில்லி, செப்.3: கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த சட்டத்துக்கு "கிரிமினல்கள் இல்லாத அரசியல்-சட்ட மசோதா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று பல்வேறு பொதுநல அமைப்புகளும் விடுத்துள்ள கோரிக்கைகளை ஏற்று, இது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தேர்தலில் நிற்க முடியாதபடி சட்ட உள்பிரிவுகள் இந்த மசோதாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி காவல் துறையினரின் வழக்குகள், சி.பி.ஐ. வழக்குகள், குற்றப்பத்திரிகைகளில் ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதன் மூலம் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிடுவது முழுமையாகத் தடுக்கப்படும். மத்திய அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மசோதா மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதிரான இந்த சட்டம், இப்போதே மாறுபட்ட கருத்துகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. பிரபல மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கருத்து தெரிவிக்கையில், இது ஒரு மிக முக்கியமான சீர்திருத்தம் என்றும் லோக்பால் சட்டத்தைவிட இது மிகவும் சிறப்பானது என்றும் குறிப்பிட்டார். வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், எதிர்க்கட்சியினரைப் போட்டியிடாமல் செய்வதற்காக இதைப் பயன்படுத்த முடியும் எனவும் எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 162 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடாளுமன்றத்தில் உள்ள 206 காங்கிரஸ் எம்.பி.க்களில் 44 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. பா.ஜ.க.வின் எம்.பி.க்களில் 44 பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிய வருகிறது. சமாஜ்வாதி எம்.பி.க்களில் 9 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களில் 8 பேர் மீதும், அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்களில் தலா 4 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன......

0 கருத்துகள்:
கருத்துரையிடுக