AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

இங்கிலாந்துடன் நாளை மோதல்: ஒரு நாள் போட்டியில் இந்தியா சாதிக்குமா?

லண்டன், செப். 2-

.

கேப்டன் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இந்தியா 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்திடம் இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பற்றி டோனி கூறுகையில், 20 ஓவர் போட்டியில் 8 முதல் 13 ஓவர் வரை முக்கியமானது.

இந்த சமயத்தில் விக்கெட் கைவசம் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசாக விக்கெட்டுகள் சரிந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்றார்.

இங்கிலாந்தில் இந்திய அணிக்கு அடிமேல் அடி விழுவது போல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது.

தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்தியா ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க இருக்கிறது. டெஸ்ட் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி தோல்வியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே ஒரு நாள் போட்டிகளில் இந்தியா மீண்டு எழுந்து தனது பெயரை நிலை நாட்டுமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் காம்பீர் காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். 22 வயதான ஜடேஜா இது வரை 35 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 535 ரன்களும், 29 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
கடைசியாக அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஆடினார். 10 மாத இடை வெளிக்குப்பிறகு அவர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். காம்பீர் விலகல் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக