வெள்ளி, 2 செப்டம்பர், 2011
உலகம்ஜப்பானில் நிலநடுக்க ஒத்திகை....
டோக்கியோ,செப்.1: ஜப்பான் நாட்டில் தேசிய அளவில் நிலநடுக்க விழிப்புணர்வு ஒத்திகை வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
டோக்கியோ நகரின் மையப் பகுதியில் மட்டும் 100 இடங்களில் பொது இடத்தில் இந்த ஒத்திகை நிகழ்ந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான அறிவிப்பு வந்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கையைப் போலீஸôர் மேற்கொண்டனர்.
கடந்த மார்ச் 11-ல் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமியால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டது. அது இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
இந்த நிலையில் ஜப்பானிய அரசு வழக்கமாக மேற்கொள்ளும் நிலநடுக்க விழிப்புணர்வு ஒத்திகை நாடு முழுவதும் மீண்டும் நடத்தப்பட்டது. 1923-ம் ஆண்டு மிகப்பெரியநிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்க அளவுமானியில் அது 7.3 அலகாகப் பதிவானது. அப்போது மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். செப்டம்பர் முதல் தேதி நடந்த அச் சம்பவத்தை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் அந்த நாளையே விழிப்புணர்வு நாளாக ஜப்பானியர்கள் கொண்டாடுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக