AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தமிழக மாணவருக்கு எச்பி, ஏசர் மடிக் கணினி ...........

தொலைக்காட்சிப் பெட்டிகள் தேவைக்கு அதிகமாகக் கொட் டிக்கிடக்கும் நிலையை எட்டி விட்ட தமிழ்நாட்டில், இலவச மடிகணினிகள் வீடுதோறும் குடிகொள்ள இருக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் மாண வர்கள் அனைவருக்கும் மடி கணினி என்று தேர்தலின் போது உறுதி அளித்த அதிமுக அந்த உறுதியை நிறைவேற்றும் வகையில் இம்மாதம் 15ம் தேதி முதல் கட்டமாக இலவச கணினிகளை வழங்குகிறது. உயர்நிலை மேல் வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் முதல் தவணையாக செப்டம்பர் 15ம் தேதி 7,000 கணினிகள் கொடுக்கப்படுகின்றன. கணினிகளை உருவாக்கித் தர, உலகின் பிரபலமான எச்பி, ஏசர் இரண்டு நிறுவனங்களும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ஒரு மடிகணினியை 14,000 ரூபாய்க்கு (சுமார் 400 வெள்ளி) அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. மொத்தம் 9.12 லட்சம் மடிகணினிகள் வாங்கப் படுகின்றன. அரசுப் பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் படிக்கும் 68 லட்சம் மாணவ மாணவியருக்கு மடிகணினி களை வழங்குவது திட்டம். இதற்காக குத்துமதிப்பாக 10,200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. உலகின் முன் னணி நிறுவனங்களான சாம் சோங், ஏசஸ், டெல் ஆகிய நிறுவனங்களும் ஏலக் குத் தகைகளைத் தாக்கல் செய்து உள்ளன. தமிழக அரசு கொடுப்பது இலவசக் கணினி என்றாலும் அதில் ‘விண்டோஸ்’ செயலி இருக்கும். 2 ஜிபி ராம் இருக் கும். சேமிப்பு ஆற்றல் 320 ஜிபி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கணினிகளில் அதைத் தயாரிக்கும் நிறுவனங் களின் பெயர் அடையாளம் இருக்கக்கூடாது. தமிழக அரசின் சின்னம் இருக்க வேண்டுமென்பது நிபந்தனை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக