AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 5 செப்டம்பர், 2011

நெல்லிக்குப்பம் அருகில் புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி

நெல்லிக்குப்பத்திற்கு அருகில் உள்ள வாழப்பட்டு திருக்கண்டேஸ்வரத்தில் கடந்த ஞாயிறு அன்று அல் ஹக்கீம் மஸ்ஜித் திறப்பு விழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட தமுமுக செயலாளரும், நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லீஸ் தலைவருமான சகோ. ஷேக் தாவூத் தலைமை தாங்கினார்.

மௌலவி பதுருதீன் பயாஜீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

வரவேற்புரையை இஸ்லாமிய ஐக்கிய மஜ்லீஸ் பொருளாளர் A. முஹம்மது அபுசாலிஹ் வழங்கினார்.

சின்னத்தெரு, பெரியதெரு, மீலாதுவீதி, புதுத்தெரு, குத்பாபள்ளி, முள்ளிகிராம் பட்டு, மாருதி நகர் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

S.M.ஜின்னா தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர், மௌலவி அப்துல் ரஜாக் உலவி, மௌலவி நூருல்லாஹ் மன்ஃபயி, மௌலவி அப்துல் ஹக் ஜமாலி, மௌலவி அப்துல் கரீம் காஸிமி, சகோ ஜெய்னுத்தீன் B.A சகோ A முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளிவாசலை திறந்து வைத்து தமுமுகவின் மாநில பொதுச் செயலாளர் சகோ S. ஹைதர் அலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
நகர தமுமுக தலைவரும் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லீஸ் துணைத் தலைவர் K. அப்துல் ரஹிம் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்சியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கு பெற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக