AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 5 செப்டம்பர், 2011

ஐக்கிய அரபு நாட்டில் இந்திய குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை


துபாய், செப். 4- 
 
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ராஸ் அல் கைமா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். 3 நாட்களாக அந்த வீடு பூட்டி கிடந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.
 
இதை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 44 வயது மதிக்கத்தக்க நபரும், அவரது 31 வயது மனைவியும் தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் அவர்களது 8 வயது மகள் முகம் துணியால் மூடப்பட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தாள்.
 
பணப் பிரச்சினை காரணமாக தங்களது குழந்தையை தூக்கில் போட்டு கொன்று விட்டு பெற்றோரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக