AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 8 செப்டம்பர், 2012

சிறுபான்மையின மாணவியருக்கு கல்வி உதவித் தொகை

11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 
இக்கல்வி உதவித் தொகை மூலம் கல்விக் கட்டணம், பாடப் புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டு, உறைவிட கட்டணங்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 767 சிறுபான்மையின மாணவியர்களுக்கு (இஸ்லாம்-366, கிறிஸ்தவர்-399, சீக்கியர்-1, புத்தம்-1) ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உதவித் தொகை பெற தகுதிகள்: மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று, நடப்பாண்டில் 2012-2013-ல் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். 
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்கள் இணைத்து பயிலும் கல்வி நிலையத்தில் 20.9.2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர்கள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பெற்று சரிபார்த்து, இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து புதுதில்லியில் உள்ள அலுவலகத்திற்கு 30.9.2012 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும். 
இதற்கான விவரங்களை http://maef.nic.in/என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 

சிறுபான்மையின மாணவியர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்

சபதம் ஏற்போம்

பிற சமுதாயத்தாரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவதே தொழுகை. (எனவே அத்)தொழுகையை முடிந்த வரை தங்களிடத்தே நிலை நிறுத்துங்கள்.

முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள். 

தாங்கள் அறிந்துள்ள மார்க்க விஷயங்களை ஏதுமறியா, இறைச்சிந்தனையுள்ள முஸ்லிம் சமுதாயத்திடமும், ஏனைய பிற சமுதாயத்தாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் மார்க்க மற்றும் பொது விஷயங்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும்.

நாம் ஒரு தூய முஸ்லிமாக வாழ்வதில் பெருமிதம் கொள்வதோடு, நம்மைப் பார்த்து மார்க்கத்தின்பால் மாற்றாரைக் கவர்ந்து அவர்களும் முஸ்லிமாக வாழ்ந்திட ஏவுபவராக இருங்கள்.

தான, தர்ம விஷயங்களிலும், ஜகாத் முறைப்படி கணக்கிட்டு வழங்குவதிலும், பெரியோரைப் பேணுதலிலும் அல்லாஹ்வை அஞ்சி நடங்கள். 

திருமண நெறி முறைகளை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியவாறு சிக்கனத் திருமண முறைகளைக் கையாளுங்கள். ஆண்கள் கைக்கூலி கேட்டுப்பெறுவதை அறவேத் துறந்து மணப்பெண்ணின் விருப்பமறிந்து மஹர் கொடுத்து திருமணம் செய்வதை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள். (இது நமக்கு நாமே கொண்டாடிக் கொள்ளும் இலட்சியமல்ல. இதுவே இறைவனின் தூதர் காட்டித்தந்த அழகிய முறை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்).
பகுத்தறிவளித்து நம்மைப் பிற உயிர்களிடத்திலிருந்து மிகவும் வேறுபடுத்திக்காட்டி இம்மை, மறுமை வாழ்வின் நிலையை அறியச் செய்த இறைவனையே வழிபடுங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள். 

இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையாகிய நபி(ஸல்) அவர்களின் உண்மை வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கொள்ளுமேடு டைம்ஸ் இணையத்தளம் மக்களின் முழுமையான ஆதரவில் ஓராண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அஸ்ஸலாமு அலைக்கும்........ மாஷா அல்லாஹ் கொள்ளுமேடு டைம்ஸ் இணையத்தளம் மக்களின் முழுமையான ஆதரவில் ஓராண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும் நாங்கள் யாருக்கும் பயமின்றி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் பயந்து நல்ல செய்திகளை உண்மையான செய்திகளை வழங்க துஆ செய்யுங்கள். அல்லாஹ் நம்மோடு இருப்பானாக .. ஆமீன்...........

பிரிட்டிஷ் இளவரசியுடன் கைகுலுக்க மறுத்த ஈரான் ஒலிம்பிக் வீரர்..............!!

லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில், ஈரான் நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறன் வீரர் ஒருவர் பிரிட்டிஷ் இளவரசி கேத்மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்துள்ளார், இஸ்லாமிய மரபுகளின் படி அந்நிய எதிர்பாலினருடன் ஆணோ, பெண்ணோ கைகுலுக்குவதில்லை என்பதால் இவ்வாறு அந்த வீரர் நடந்துகொண்டுள்ளார்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள
ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன, இதில் வெற்றி கண்ட வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடந்தது, பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் இளைய இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார், வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் இளவரசி கேத் கைகுலுக்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தடகளப் போட்டியில் ஈரான் வீரர் மெர்தாத் கரம் சேத் (40) என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார், மெர்தாத்தைப் பாராட்டி பதக்கத்தை அணிவித்த இளவரசி கேத்மிடில்டன், அவருக்குக் கைகொடுத்தார். ஆனால் ஈரான் வீரர் கைகுலுக்க மறுத்து பதக்கத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார், ஈரான் வீரரின் இந்த செயல் விழா மேடையில் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் அரச குடும்ப வட்டாரங்கள், இஸ்லாமியர் ஆணோ பெண்ணோ அந்நிய எதிர்பாலினத்தவருடன் கைகுலுக்குவதில்லை, இது புரிந்துகொள்ளத் தக்கதே என்று தெரிவித்தனர்

வியாழன், 6 செப்டம்பர், 2012

குர்ஆனின் அத்தாட்சிகள்


ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69

ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.
1. ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
3. ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
4. ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்
5. இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
6. லூத் அலைஹி வஸ்ஸலாம்
7. யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம்
8. ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
9. மூஸா அலைஹி வஸ்ஸலாம்
10. ஃபிர்அவ்ன்
11. காரூன்
12. பல்கீஸ் ராணி
13. மஆரிப் அணைக்கட்டு
14. குகைவாசிகள்
15. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
16. பத்ரு
17. உஹது
18. கந்தக் - அகழ்ப்போர்
19. கைபர்
20. முஅத்தா போர்
21. மக்கா வெற்றி
22. நபிகள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு
திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

ஸ்கார்ஃபை அணிந்து செய்தி வாசித்தார் ஃபாத்திமா: இதுதான் உண்மையான சுதந்திரம்!


கெய்ரோ:இளம் நிறம் கொண்ட ஸ்கார்ஃபை அணிந்து ஃபாத்திமா நபீல் வாசித்த மதியச் செய்தி எகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமைந்தது. எகிப்தை பீடையாக பீடித்திருந்த முந்தைய சர்வாதிகார ஆட்சிகளில் பெண்கள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணிவதற்கு எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது.
பெண்களுக்கு தலையை மறைக்காத உரிமை வழங்குகிறோம் என்ற போலி சுதந்திரத்தை காட்டி தங்களது மேற்கத்திய எஜமானர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே எகிப்திய சர்வாதிகாரிகளின் போக்கு அமைந்திருந்தது.
இந்நிலையில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி. பெண்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்புm ஆடையை அணியலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உண்மையான சுதந்திரம் என்பது என்ன என்பதை புரிந்துகொண்ட ஃபாத்திமா நபீல் தனக்கு கண்ணியத்தை வழங்கும் ஆடையை தேர்வுச் செய்தார்.
தலையை மறைத்து தொலைக்காட்சியில் தோன்றுவது  முபாரக் ஆட்சி காலத்தில் இயலாத ஒன்றாக மாறியது. ஹிஜாப் அணிய தடையில்லை என்றாலும் தொலைக்காட்சியில் இது ஒரு நடைமுறையாக இருந்து வந்தது. ஸ்கார்ஃப் அணிந்த செய்தி வாசிப்போரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தொலைக்காட்சியில் காட்டுவதை தடுப்பதில் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர். அவ்வாறு ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும் கேமராவுக்கு பின்னிலும், ரேடியோவிலும் மட்டுமே வேலை வழங்கப்பட்டது.
ஹிஜாப் அணிவதற்கானஉரிமையை கோரி நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பல பெண்களும் பெற்றபோதும் ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய அரசு அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
சேனல் ஒன் என்ற தேசிய தொலைக்காட்சி சானில்  ஸ்கார்ஃப் அணிந்து தோன்றிய ஃபாத்திமா மதிய செய்திகளை வாசித்துவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘இறுதியில் புரட்சி வந்தடைந்துவிட்டது’ என கூறினார்.
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுகையில், “எகிப்தில் 70 சதவீத பெண்களும் தலையை மறைப்பவர்கள்ஆவர். ஆகவே இந்த மாற்றத்தில் ஆச்சரியமான ஒன்றல்ல” என கூறுகிறது. “ஏராளமான அரபு, சர்வதேச சானல்களில் தலையை மறைத்த பெண்கள் தோன்றுகிறார்கள்” என்று முர்ஸியின் அரசில் செய்தி ஒலிபரப்பு அமைச்சராக பணியாற்றும் ஸாலிஹ் அப்துல் மக்சூத் தெரிவித்துள்ளார்.

புதன், 5 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி அனுதாபம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
இன்று சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு கொடூரமான முறையில் அதிகமான மக்கள் உயிர் பலியாகியும் பலர் காயம் அடைந்தும் இருப்பது வேதனை அளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் மகன் முஹம்மது பஹத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


லால்பேட்டை மேலத்தெருவிலிருக்கும் கடலூர் மாவட்ட இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் அவர்களின் மகன் கடந்த ஈத் பெருநாளன்று நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல்  பாண்டிச்சேரி மருத்துவ மனையில் இன்று 01.09.2012 அதிகாலை 5.30 மணியளவில்  உயிரிழந்தார்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசலில் நடைப்பெறும்.