லால்பேட்டை மேலத்தெருவிலிருக்கும் கடலூர் மாவட்ட இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் அவர்களின் மகன் கடந்த ஈத் பெருநாளன்று நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் பாண்டிச்சேரி மருத்துவ மனையில் இன்று 01.09.2012 அதிகாலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசலில் நடைப்பெறும்.
/
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.
/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக