மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
இன்று சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு கொடூரமான முறையில் அதிகமான மக்கள் உயிர் பலியாகியும் பலர் காயம் அடைந்தும் இருப்பது வேதனை அளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தார்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, உயிர் இழந்த குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொகையை தலா 5 லட்சமாகவும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமாகவும் உயர்த்தித்தர கேட்டுக் கொள்கிறோம். காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்ய வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
தீ விபத்துக்கு உள்ளான தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், சட்டப்படி உரிய பாதுகாப்பு இல்லாமல் இயங்கிவரும் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் உடனடியாக மூடவேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
(ஜே.எஸ்.ரிபாயீ)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக