AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 4 ஜனவரி, 2012

PhD பட்டம் பெற்றவருக்கு வாழ்த்து

கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ. மு.இ. முஹம்மது இர்ஷாத் (26), அணுமின் நிலையத்தால் கடல் வாழ் உயிரினம் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைகழகத்தில்  4-1-2012 அன்று தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர்  4-1-2012 அன்று தமுமுக தலைமையகத்துக்கு வருகை தந்து தமுமுக நிர்வாகிகளை சந்தித்தபோது அப்போது அவருக்கு தமுமுக துணை பொதுசெயலாளர் ஜே எஸ் ரிபாயி, மாநில செயலாளர் பி எஸ் ஹமீது ஆகியோர் வாழ்த்து கூறினர். தென்சென்னை மாவட்ட தமுமுக - மமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு : ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம் !

சென்னை : எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகு நடக்கும் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 10 ஆம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிவடைகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை

4.4.2012   தமிழ் முதல்தாள்

9.4.2012   தமிழ் இரண்டாம் தாள்

11.4.2012   ஆங்கிலம் முதல் தாள்

12.4.2012   ஆங்கிலம் இரண்டாம் தாள்

16.4.2012   கணிதம்

19.4.2012   அறிவியல்

23.4.2012   சமூக அறிவியல்

10 ஆம் வகுப்பு மெட்ரிக் அட்டவணை 

4.4.2012    தமிழ் முதல்தாள்

9.4.2012    தமிழ் இரண்டாம் தாள்

10.4.2012   ஆங்கிலம் முதல் தாள்

11.4.2012   ஆங்கிலம் இரண்டாம் தாள்

12.4.2012   கணிதம் முதல் தாள்

16.4.2012   கணிதம் இரண்டாம் தாள்

17.4.2012   அறிவியல் முதல் தாள்

18.4.2012   அறிவியல் இரண்டாம் தாள்

19.4.2012   வரலாறு

20.4.2012   புவியியல்

மக்கள் குறை தீர்க்கும் முகாம் - சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது


இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை நீக்க, மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் அவர்களிடம் நேரில் வழங்கி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வலியுறுத்தப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் முகாம் - சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது

உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்


உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  பேரா. ஜவாஹிருல்லா,  மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராய், EXNORA நிறுவனர் நிர்மல் குமார், Bio Gas நிறுவனர் ராக்கி, Welfare Association தலைவர் ETA சலாவுதீன், உஸ்வத்துல் ஹசனா தலைவர் அப்துல் காதர், கீழக்கரை கமிஷனர் முஜிபுர்ரஹ்மான், துணை செயலாளர்  ஹாஜா மொய்தீன், தமுமுக நகர் தலைவர் செய்யது இப்ராஹீம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் - பேரா. ஜவாஹிருல்லா கண்டன உரை


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக மாநில துணை செயலாளர் S. காதர் மொய்தீன், கன்னியாகுமரி தமுமுக மற்றும் மமக பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்  - பேரா. ஜவாஹிருல்லா  கண்டன உரை

கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்  - பேரா. ஜவாஹிருல்லா  கண்டன உரை

திங்கள், 2 ஜனவரி, 2012

சவூதி அரேபியாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் தமுமுக துணையுடன் மீட்பு

அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்பட்டு மீண்டும் பணிக்குச் செல்லும் தகவல்களை ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனியிடம் தொலைபேசியில் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட மினவர்கள் சவூதி அரேபியா ஜிஸான் என்ற பகுதியில் மீன்பிடி பணிக்கு வந்துள்ளனர் அவர்கள் தனது ஸ்பான்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பளம் மற்றும் உணவு தங்குமிடம் போன்ற வசதிகளின்றி மிகவும் கஸ்டப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரி  கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் உத்தரவின் பேரில் ரியாத் மத்திய மண்டல தமுமுக உடனடியாக களத்தில் இறங்கியது தூதரகத்தின் துணையுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு இப்போது அவர்கள் பணிக்குச் செல்கின்றனர்.

ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்!! – ஆராய்ச்சி தகவல்


எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம்
மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.
அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.
எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம் (இளமை, ஆரோக்கியம் நிச்சயம்) – அராய்ச்சி தகவல்


தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை:
அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான்.
எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:
வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல.
ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது.
முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம்.
வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.