AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 27 மார்ச், 2013

எதிஹாட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை குத்தகைக்கு எடுக்கின்றது

ஐக்கிய அரபுக் குடியரசின், எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-330-200 ஒன்றை குத்தகைக்கு எடுக்கின்றது. அத்துடன் 60 ஊழியர்களையும் ஜெட் நிறுவனம் ஒப்பந்தத்தின்படி, எத்திஹாட் நிறுவனத்திற்கு அளிக்கின்றது.
பேச்சு வார்த்தையின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட இத்திட்டம், பங்குகளின் பிரிப்பு, நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் தெளிவுபடுத்தப்பட்டபின் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

சமீபத்தில்தான் ஜெட் நிறுவனம், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த மூன்று அனுமதி நேரங்களை, 70 மில்லியன் டாலருக்கு, எதிஹாடிற்கு விற்று, பின் அவற்றையே குத்தகைக்கு எடுத்துள்ளது.


தற்போது ஏர்பஸ் விமானத்தை விடுவதன் மூலம் கிடைக்கும் 300 மில்லியன் டாலர், அந்நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் பயன்படும். மேலும், எதிஹாட் நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளின் அணுகுமுறையும் ஜெட் நிறுவனத்திற்கு கிட்டும்.

எதிஹாட் நிறுவனத்திற்கோ, இந்தியாவின் சர்வதேச வான் வழியில் நுழைவதன் மூலம், தன்னுடைய உலகளாவிய சேவைகளில் இந்தியாவையும் இணைத்துக்கொள்ள முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக