AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 21 மார்ச், 2013

வட இந்தியாவின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் மௌலானா கலீம் சித்திகி லால்பேட்டை வருகை.


வட இந்தியாவை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா கலீம் சித்திகி அவர்கள் தப்லீக் ஜமாத் கொள்கை சார்ந்து முஸ்லிம் அல்லாத மக்களிடையே தாஃவா பணியில் ஈடுபட்டு வருபவர்.முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிமுகம் செய்து வைக்கும் தப்லீக் கொள்கையுடை முதலாமவர் இவராகத் தான் இருக்க முடியும்.

உலகம் முழுதும் சுற்றுப் பயணங்கள் செய்து தாஃவா பணியையும் அது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வரும் இவர் அதன் ஒரு பகுதியாக லால்பேட்டையில் இருக்கும் பிரபல இஸ்லாமிய கலாசாலையான ஜாமிஆ மன்பவுல் அன்வாருக்கு இன்று வருகை தந்தார்.
உலமாக்கள்,இஸ்லாமிய மாணவர்கள்,ஜமாத்தார்கள்,தப்லீக் ஜமாத் ஊழியர்கள்,பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மௌலானா கலீம் சித்திகி அவர்கள் தாஃவா பணியின் அவசியம் குறித்தும் அதில் தாம் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் உரையாற்றினார்;.

அவர் தமது உரையில் குழுமி இருந்த அனைவரையும் தாஃவா பணியை செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மௌலானா நூருல் அமீன் ஹஜ்ரத் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்,மதரஸா மாணவர் சதாம் ஹுஸைன் கிராஅத் ஓதினார்.தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவரும் 24 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் லால்பேட்டை மதரஸாவின் பேராசிரியருமான மௌலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் உள்ளிட்ட மதரஸாவின் ஆசிரியர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

செய்தி-படங்கள்: கொள்ளுமேடு ரிஃபாயி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக