AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 15 மார்ச், 2013

ஹஜ் பயணிகளிடம் இந்திய அரசு சேவை வரி வசூலிப்பது நிறுத்தப்படும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி


மெக்காவில் ஹஜ் புனிதப்பயணம் செய்யும் யாத்ரீகர்களிடம் சேவை வரி வசூலிக்கப்படமாட்டாது என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளித்தார். இது தொடர்பாக, சிதம்பரத்தை தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜே.எம். ஆருண், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி. சித்தன்,எஸ்.எஸ். ராமசுப்பு, பி. விஸ்வ நாதன் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது சிதம்பரத்திடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவுக்குபுனிதப் பயணம் செய்கின்றனர்.தமிழகத்தில் இருந்துசெல்லும் யாத்ரீகர்களில் பெரும்பாலானோர் 60 வயதைக்கடந்தவர்கள்.சவூதியில் தங்கியுள்ள நாள்களில் யாத்ரீகர்களுக்குவழங்கப்படும் சேவைக்காகமத்திய அரசு சேவை வரிவசூலிப்பதாக இந்தியாவில்உள்ள ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் முறையிடுகின்றனர்.வழக்கமாக ஹஜ் யாத்ரீகர்கள் சவூதியில் இறங்கியதும்அவர்களைப் பாதுகாப்பது,புனிதக் கடமையை நிறைவேற்றுவது,  பராமரிப்பது, அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்ப்பது, மீண்டும் அவர்களைசவூதி விமான நிலையத்துக்குக்கொண்டு வந்து விடுவதுவரையிலான ஏற்பாடுகளைசவூதி அரசு அங்கீகரித்தடிராவல் ஆபரேட்டர் நிறுவனம்தான் மேற்கொள்ளும்.ஏற்கெனவே, இந்தியாவில்ஹஜ் யாத்ரீகர்களின் பயணத் துக்கான விமான டிக்கெட்டுக்கும் அவர்கள் கொண்டுசெல்லும் வெளிநாட்டு இந்தியரூபாய்க்கும் சேவை வரிவிதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சவூதி அரசின் கட்டுப்பாட்டில் ஹஜ் பயண காலத்தில்வழங்கப்படும் யாத்ரீகர்களிடம்சேவை வரியை மத்திய அரசுவசூலிப்பது ஏற்புடையதாக இல்லை என சிதம்பரத்திடம்காங்கிரஸ் உறுப்பினர்கள்கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற நடவடிக்கைமேற்கொள்ளப்படுவதாக எனதுகவனத்துக்கு வரவில்லை.அவ்வாறு நடைபெற்றிருந்தால்அந்த வரியை வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சிதம்பரம்உறுதியளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக