AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 27 மார்ச், 2013

எஸ் பி யின் அதிரடி நடவடிக்கையால் கடலூர் மாவட்ட போலீசார் கலக்கம்

சிதம்பரம், :  கடலூர் எஸ்பி ராதிகா பொறுப்பேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அரசு மூலம் வழங்கப்பட்ட செல்போனில் தான் உயர் அதிகாரிகளிடம் பேசவேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஓய்வுபெற்ற போலீசாரின் கிராஜுவிட்டி முறைகேடு நடந்துள்ளதை கண்டு பிடித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் சம்பளக்கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி அனைத்து போலீசாரின் வங்கி கணக்கு புத்தகத்தின் ஜெராக்சையும் சரி பார்த்து அவர்களுக்கான சம்பளப்பணம் அவர்களது கணக்கில் சேருகிறதா என்று ஆய்வு செய்துள்ளார். முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார். 

 இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எஸ்பி ராதிகா, பணி முடிந்தவர்கள் காவல்நிலையத்தில் தேவையில்லாமல் இருக்கக்கூடாது என்றும், அப்படி இருந்தால் போலீஸ் சீருடையில் தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். சிவில் டிரஸ்சில் இருந்தால் முறைகேடு நடக்கவும், லஞ்சம் லாவண்யம் நடைபெற வாய்ப்பு இருக்கும் என்பதால் இது போன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் காவல்நிலையத்தில் பொறுப்பு அதிகாரியை தவிர மற்றவர்கள் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் இருந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், ரோந்துப் பணியிலும் ஈடுபடவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். எஸ்பியின் இதுபோன்ற அதிரடியான உத்தரவுகளால் கடலூர் மாவட்ட போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக