AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 17 மார்ச், 2013

வீராணம் தண்ணீர் வரத்தொடங்கியது: சென்னையில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது


சென்னை நகர குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 230 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தினமும் சென்னைக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
 
ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த 15 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தினமும் 150 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரியில் 310 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
 
மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டு விட்டது. இருப்பினும் வீராணத்துக்கு மேலும் சில நாட்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வீராணம் ஏரியில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு கோடையை சமாளிக்கலாம் என்று அதிகரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 180 கனஅடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
 
சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதை தவிர கிருஷ்ணா தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படுவதால் கண்ட லேறு அணையில் இருந்து தற்போது 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 
சென்னையில் கோடையில் தண்ணீர் பிரச்சினையை பொறுத்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக