AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 7 பிப்ரவரி, 2013

டெல்லியில் மோடிக்கு கடும் எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம்! போலீஸ் தடியடியால் பரபரப்பு!


டெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.
மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.
இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.

டெல்லி பல்கலைக்கழக மாணவரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினருமான முஹம்மது ஜாபிர் கூறியது: “மோடியின் வளர்ச்சி 2002-ஆம் ஆண்டு குஜராத் கண்ட இனப் படுகொலையாகும். வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு உரிமை இல்லை” என்றார்.
ஹிந்து கல்லூரியின் மாணவி தீபா சர்மா கூறியது: “குஜரத்தின் வளர்ச்சி என்பது பா.ஜ.கவின் “இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரம் போலவே கற்பனையாகும். குழந்தைகளும், பெண்களும் அனீமியா மூலம் மரணிக்கும் குஜராத்தில் வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு அருகதை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழக மாணவர் அஸத் அஷ்ரஃப் கூறியது: “மோடியின் கபட வளர்ச்சி வாதத்திற்கு எதிராக மாணவர்களின் எதிர்ப்பு தொடரும்” என்றார்.
போராட்டத்திற்கு பிறகு ஐந்தரை மணியளவில் போலீசார் கைது செய்தவர்களை விடுதலைச் செய்யக் கோரி மாணவர்களும், பேராசிரியர்களும் மவுரிஸ் நகர் போலீஸ் ஸ்டேசனை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற ஏ.பி.வி.பி., பா.ஜ.கவினர் மீது புகார் அளித்தனர். கைது செய்தவர்களை விடுவித்த போலீஸ், ஏ.பி.வி.பி, பா.ஜ.கவினர் மீதான புகாரை பதிவுச் செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவு வரை மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.
மோடி மூன்றாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்தின் வெளியில் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக