AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரப்பூர்வ தடை!


அபுதாபி:வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள  ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தடை
விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய மீடியா கவுன்சில்(என்.எம்.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 24-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தடபுடலான சடங்குகளுடன் இத்திரைப்படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இத்திரைப்படத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் அரசின் காதுகளுக்கு எட்டியதை தொடர்ந்து தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிப்பதாக தேசிய மீடியா கவுன்சில் அறிவித்தது. இத்திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு இன்று வெளியாக இருந்த சூழலில் இந்த அறிவிப்பை கவுன்சில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரக மீடியா கவுன்சிலின் தலைவர் ஜுமா லீம் கூறியது: இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்படுத்தியுள்ளதால் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்று கூறினால் தீவிரவாதம் என்று இத்திரைப்படத்தில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாம் பொறுமையின் மார்க்கமாகும்.ஒரு நிரபராதியை கொலைச் செய்வது உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களை கொலைச் செய்வதற்கு சமம் என்று இஸ்லாம் கூறுகிறது என்று லீம் தெரிவித்தார்.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், மலேசியா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக