AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

காட்டுமன்னார்கோவிலில்-சிதம்பரம் போக்குவரத்துக்கு இடையூறாக தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

காட்டுமன்னார்கோவிலில்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளியங்கால் ஓடையில் சாலை ஓரத்தில் தடுப்பு கட்டை கட்ட குவிக்கப்பட்ட ஜல்லி கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டு இருப்பதால் விபத்து அபாயம் உருவாகி இருக்கிறது.
 காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து மழை காலங்களில் உபரிநீர் வெள்ளியங்கால் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் வெளியேற்றப்படும். இதன் காரணமாக கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். மேலும் வெள்ளியங்கால் ஓடை மழை காலங்களில் விளை நிலங்களில் உள்ள வெள்ளநீர் வடிவதற்கு வடிகாலாகவும் உள்ளது. இதனால் வெள்ளியங்கால் ஓடை செல்லும் பாதையில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் வடிவதற்கு மதகுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த மதகுகள் திருச்சி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த மதகுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 அதன்படி வீரநத்தம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த மதகு சீரமைக்கப்பட்டு தடுப்பு கட்டை கட்டப்பட்டது. இந்த பணிக்காக ஜல்லி கற்கள் சாலையில் குவிக்கப்பட்டன. பணி முடிந்து பல நாட்கள் ஆகியும் மீதமுள்ள ஜல்லிகள் அப்புறப்படுத்தப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 
 இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் இரவு நேரங்களில் அதிக அளவு வாகனங்கள் செல்கிறது. எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட
முடியாமல் வாகன ஓட்டி கள் தடுமாறி வருகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி குவிக்கப்பட்ட ஜல்லி மீது விழுகின்றனர். இதனால் தொடர்ந்து இந்த இடத்தில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆகவே நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்த வேண்டுமென  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக