AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஏர் இந்தியா உலகின் மூன்றாவது பாதுகாப்பற்ற விமானம்!


வாஷிங்டன்:ஏர் இந்தியா விமானம் சீனா மற்றும் டம் விமானத்தை அடுத்து மூன்றாவது பாதுகாப்பற்ற விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 60 விமான சேவையை பரிசீலித்த ஹம்பர்கை சேர்ந்த ஜாக்டேக் (JACDEC – Jet Airliner Crash Data Evalution Centre) என்னும் இணையத்தளம் இந்தியாவின் தேசிய விமானமான ஏர் இந்தியாவிற்கு 58_வது இடத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் பாதுகாப்பான விமானமாக பின்னைர் விமானம் என்றும் 2_வதாக நியூசிலாந்து விமானமும், 3_வது இடமாக கேத்தே பசிபிக்கும் 4_வது இடத்தில் எமிரேட்ஸ் விமானமும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 9 இடத்தை பிடித்துள்ள எந்த விமானமும் கடந்த 30 ஆண்டுகளில் ஒரு விமானத்தைக் கூட இழக்கவில்லை மேலும் அவை விபத்துக்கு உள்ளாகவும் இல்லை என்பது அந்த இணையத்தளத்தின் அறிக்கை ஆகும்.

மேலும் வட அமெரிக்காவை சேர்ந்த எந்த விமான சேவையும் முதல் 10 இடத்தை பிடிக்கைவில்லை என்பதும் மேலும் அவை கடைசி 10 இடத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாக்டேக் இணையத்தளம் கடந்த 30 ஆண்டுகளில் குறிப்பிட்ட விமான சேவை நிறுவனங்களின் விமான விபத்துக்களை கணக்கில் கொண்டும் மற்றும் அவைகளின் வருமான விபரங்களையும் கணக்கில் கொண்டு இந்த பட்டியலை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டில் 496 விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. இது கடந்த 2011_ஆம் ஆண்டை விட எண்ணிக்கையில் 2 குறைவாகும். இதில் நைஜீரியாவில் விபத்துக்குள்ளாகி 169 நபர்களை பலிவாங்கிய டானா விமானமும் மற்றும் பாகிஸ்தானில் விபத்துக்குள்ளாகி 127 நபர்களை காவு வாங்கிய போஜா விமானமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக