AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 24 ஜனவரி, 2013

மீலாதுந் நபி விழா ஆளுநர்,முதல்வர் தலைவர்கள் வாழ்த்து


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தி
/
அண்ணல்  நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம்  “மீலாதுன் நபி” திருநாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
/
எளியோர்களிடம் கருணைக் காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவர்களுக்கு உணவு அளியுங்கள் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு எடுத்துரைத்த போதனையாகும்.
/
உலகில் அமைதி தவழ்ந்திட அன்னார் போதித்த பொறுமை, சகிப்புத் தன்மை, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்ந்து  பெருமானார் நபிகள் நாயகத்தின் வழியை பின்பற்றிட  உறுதியேற்போம்.  இந்த இனிய நாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய  “மீலாதுன்  நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
/
ஜெ ஜெயலலிதா
தமிழக முதலமைச்சர்
/
வெளியீடு:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9
/
தமிழகஆளுநர் 
/
மீலாதுந் நபி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகஆளுநர் வெளியிட்டி ருக்கும்வாழ்த்துச் செய்தியில் சகோதரத்துவம் ஒற்றுமை, ஆகியவற்றை வளர்க்க ஒரு நல்லவாய்ப்பை ஏற்படுத்தட்டும் என்றுகூறியுள்ளார். முஹம்மது நபிஅவர்கள் வகுத்த பாதையைபின்பற்றி அமைதி ஒற்றுமையைமேம்படுத்த நம்மை ஆட்படுத்திகொள்வோம் என்றும் ஆளுநர்ரோசய்யா கூறியுள்ளார்
/
மீலாது நபியையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி 
/
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளை மிலாது நபித் திருநாளாக இஸ்லாமிய சமுதாய மக்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆண்டு தோறும் கொண்டாடு கின்றனர். நபிகள் நாயகம் தாயின் வயிற்றிலிருந்தபோதே தந்தையாரையும், 6 வயதில் தாயாரையும் இழந்து தொடர்ந்து பல இன்னல்களைச் சுமந்தவர். ஆயினும் அவர், தமது வாழ்நாளில் பொய் பேசியதே இல்லை.
வாக்குறுதிகளில் இருந்து மாறியதில்லை. தனக்குத் துன்பம் இழைத்தவர்களைப் பழி வாங்கியதும் இல்லை. அவர் எப்போதும் ஏழை களுக்காக இரக்கப்பட்டார். அனாதைகளுக்கு ஆதரவு தந்தார். துன்பத்தில் சிக்கிக் கொண்டவர்களின் துயரங்களைத் துடைத்தார். கோபம், பொறாமை, பேராசை, புறம் பேசுதல் போன்ற குணங்கள் கூடாது என்றார். இதனை, கோபம் அறிவை விழுங்கி விடும், பொறாமை மார்க்கத்தை விழுங்கி விடும், பேராசை வெட்கத்தை விழுங்கி விடும், புறம் பேசுதல் நற்செயலை விழுங்கி விடும் எனப் போதித்தார். மற்றவரை ஒருவர் நிந்திக்கும்போது அது வானத்திற்குச் செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு, அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு, அது வலதுபுறம், இடதுபுறம் என அலைந்து திரிகின்றது.
எங்குமே அதற்கு இடமில்லாமல், அது எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேர்கிறது என்று கூறி எவரையும் நிந்திக்கக் கூடாது என்றார். அண்ணல் நபிகளாரின் இத்தகைய போதனைகள் மனிதன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத்தக்க எளிய, ஆனால் அரிய அறிவுரை களாகும். அவை அனைத் தும் இஸ்லாமியத் தத்துவ முத்துக்களாகவே மதிக்கப் படுகின்றன. நபிகளாரின் இத்தகைய போதனைகள் சிறுவயதி லேயே என்னைக் கவர்ந்த தானால்தான், ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பே, திருவாரூரில் பள்ளியில் பயின்றபோது ஒரு கையிலே குடியரசு ஏட்டையும், ஒரு கையிலே முஸ்லீம் லீக் கொள்கை பரப்பும், தாருல் இஸ்லாம் ஏட்டையும் சுமந்தபடி இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டேன் நான் என்பதை இவ் வேளையில் நினைவு கூர்கிறேன்.
அக்காலம் தொட்டு இன்று வரை நபிகளாரின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதா யத்தின்பால் நிறைந்த பற்றும் பாசமும் கொண்டுள்ள உணர்வோடு, இஸ்லா மிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ்:- 
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிறந்த நாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் நாம், அவரது போதனைகளை உண்மையாக பின் பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே அவர் போதித்த அன்பு, அமைதி, சமாதானம், சமய நல்லிணக்கம், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றை கடைபிடிக்க அவரது பிறந்த நாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- 
அகிலம் எங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் உவகையுடனும், நம்பிக்கையுடனும் போற்றுகின்ற திரு நாளாகிய நபிகள் நாயகத்தின் பிறந்த நன்னாளில், அவர் காட்டிச் சென்ற அறநெறியினைப் பின்பற்றி, அன்புடனும், சகோதர பாசத்துடனும், அனைவரும் வாழ்ந்திட உறுதி கொள்வோம் என்று, மீலாடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:- 
மனித நேயம், சகோதர உணர்வு, சமத்துவம் கருணை, கொடை உள்ளம் ஆகிய நற்பண்புகள் எல்லோருடைய உள்ளங்களிலும் மலர்ந்து இவ்வுலகம் அமைதியின் நிலைக்களனாய் விளங்கிட அண்ணல் நபிகளாரின் சீரிய கொள்கைகளைக் கடைப்பிடித்திட உறுதி ஏற்போம். நபிகள் நாயகம் அவதாரத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மிலாடி நபி திருநாளில் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- 
நபிகள் நாயகம் ஆடம் பரத்தை ஒதுக்கி, எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அந்த மாபெரும் புனிதர் அவதரித்த இந்நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மிலாது நபி திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் ஜவஹர் அலி :- 
முகம்மது நபி மனிதன் ஒழுக்கமுடன் வாழ வாழ்க்கை தத்துவத்தை தெள்ள தெளிவாக எடுத்துரைத்தார். முகம்மது நபி பிறந்த இந்நாளை கொண்டாடும் அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக