AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 24 ஜனவரி, 2013

விஸ்வரூபத்திற்கு இடைக்காலத் தடை: சமுதாய ஒற்றுமைக்கு முதல் வெற்றி!


இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவல்ல விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென தமுமுக உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் தமிழக உள்துறைச் செயலாளரை  நேற்று (23.01.2013) காலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இப்படம் திரைப்படம் வெளியானால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் கூறினர்.
முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் இத்திரைப்படத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக