AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 12 ஜனவரி, 2013

கடலூர் மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் குறைவு


கடலூர் மாவட்டத்தில் 17 லட்சத்து 84 ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளதாகவும், ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 20 ஆயிரத்து 185 பெண் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என்பது இறுதி வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
வாக்காளர் தினமான இம்மாதம் 25-ம் தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் விழாவின் அடையாள அட்டை வழங்கப்படும் என கடலூர் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களது அறிவுரைகளின்படி கடலூர் மாவட்டத்தில் 01-10-12 முதல் 20-11-12 வரையிலான காலத்தில் 01-01-13 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான 99 ஆயிரத்து 547  படிவங்கள் பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பின் 10 ஆயிரத்து 785 படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, 88 ஆயிரத்து 762 படிவங்கள் ஏற்கப்பட்டு அதன்படி புதிய வாக்காளர் பட்டியல் வாக்குப் பதிவு ஆணையர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 53 ஆயிரத்து 524 வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இடம் பெயர்வு, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு உள்ளிட்டவை அடங்கும்.  இதையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றங்களிலும் 17 லட்சத்து 84 ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 13 ஆயிரத்து 63, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 92 ஆயிரத்து 878 வாக்காளர்கள். இதன்மூலம் ஆண்களைக் காட்டிலும் 20 ஆயிரத்து 180 பெண் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிவாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம்: (151)திட்டக்குடி-மொத்தம்:188552(ஆண்: 95123- பெண்: 93429), (152) விருத்தாசலம்-மொத்தம்:209421(ஆண்: 106468- பெண்: 102949), (153) நெய்வேலி-மொத்தம்:180047(ஆண்: 92091- பெண்: 87956),(154) பண்ருட்டி- மொத்தம்:206713 (ஆண்: 103075- பெண்:103638), (155) கடலூர்- மொத்தம்:203088 (ஆண்: 100521- பெண்- 102566:),(156) குறிஞ்சிப்பாடி- மொத்தம்: 197604(ஆண்: 100713- பெண்: 96891),(157) புவனகிரி-மொத்தம்:219174(ஆண்: 111347- பெண்: 107827),(158) சிதம்பரம்-மொத்தம்:208926(ஆண்: 104502- பெண்:104424) மற்றும் (159) காட்டுமன்னார்கோவில்-மொத்தம்:192423 (ஆண்: 99223- பெண்: 93198).
புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 19 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்க ஏதுவாக தேசிய வாக்காளர் தினமான 25.01.13 அன்று மாவட்ட அளவிலும், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ள விழாவின்போது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விடுபட்ட வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்கள் தொடர்புடைய வாக்குப் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களில் வேலை நாள்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்
துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக