AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 29 ஜனவரி, 2013

சென்னை விமான நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்ட முனையம் வரும் 31ம் தேதி திறப்பு

சென்னை : புதிய விமான நிலையம் ஜனவரி 31 ஆம் தேதி திறக்கப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு விமான முனையத்தின் விரிவாக்கபணி 2008ம் ஆண்டு தொடங்கியது. ரூ.2000 கோடி செலவில் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன. இவற்றை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அல்லது பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைப்பார் என்று விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால், 2 மாதத்துக்கு முன்பு கூறினார். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, வரும் 31ம் தேதி புதிய விமான முனையங்களை திறந்து வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து, விமான நிலைய இயக்குனர் சுரேஷ் கூறியதாவது: ‘’விரிவுபடுத்தப்பட்ட விமான புதிய முனையத்தை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, 31ம் தேதி பகல் 3 மணிக்கு திறந்துவைக்கிறார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய உள்நாட்டு முனையத்தில் விழா நடக்கிறது. விழா சுமார் ஒரு மணி நேரம் நடக்கும். துணை ஜனாதிபதியால் திறந்துவைக்கப்படும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங், விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, டி.ஆர்.பாலு எம்.பி. தன்சிங் எம்எல்ஏ, உட்பட பலர் கலந்து கொள்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த புதிய விமான முனையங்கள் திறப்பு விழா நடத்தினாலும், முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர 2 மாதத்திற்கும் மேல் ஆகும். ஏனென்றால், புதிய முனையங்களில் ஏர்லைன்ஸ் அலுவலகங்கள், கவுன்டர்கள் ஏற்படுத்தவேண்டும். அதோடு பலத்தரப்பட்ட வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கி ஏடிஎம்களுக்கு இடமாற்றம் செய்ய கால அவகாசம் தேவை. அவைகளை புதிய முனையங்களில் அமைத்தபின் முழுமையாக ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படும் என்று தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக