AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 டிசம்பர், 2012

வீராணம் தண்ணீரை திறக்க கோரிக்கை

சிதம்பரம், : வீராணம் ஏரி உரிமை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 76 கனஅடி கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்தும் தண்ணீர் இல்லாமல் கருகும் பயிரை பார்த்து விவசாயிகள் விரக்தியின் உச்சகட்டமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வது மனித நேயத்திற்கு உட்பட்டதாகும். ஆனால் இப்பகுதியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் நலன் கருதி வீராணம் குடிநீர் திட்டத்தை கைவிட்டு, மேலும் வீராணம் ஏரி தண்ணீரை உடனே பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக