AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக இ. அஹமது சாஹிப், பொதுச் செயலாள ராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொருளா ளராக பி.கே. குஞ்ஞாலி குட்டி ஆகியோரும், துணைத் தலைவர்கள் இருவர், செயலாளர்கள் ஐவர், துணைச் செயலாளர் கள் ஐவரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடை பெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் செயல்படுவது என முடிவெடுக்கப் பட்டு கேரள ராஜ்ஜிய முஸ்லிம் லீகின் முழுமையான ஒத்துழைப் போடு சட்டப்பூர்வமாக பணிகள் செய் யப்பட்டன.
இந்தியத் தேர்தல் ஆணை யம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து ‘ஏணி’ சின்னமும் வழங்கியது. இதனை யொட்டி, புதிய சட்டத் திட்ட விதிகளின்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மாநில நிர்வாகி கள் தேர்தலும் நடத்தப்பட்டன. பத்தாயிரம் உறுப்பினர்க ளுக்கு ஒரு தேசிய கவுன்சில் உறுப்பினர் என்ற வகையில் 398 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய நிர்வாகிள், ஒவ் வொரு மாநிலத்தின் தலைவர், செயலாளர்கள், அந்தந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் எண்ணிக் கையில் 10 சதவீதம் மற்றும் தேசியத் தலைவரால் நியமிக் கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்கிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய் யப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட தேசிய செயற்குழு மற்றும் தேசிய கவுன்சில் கூட்டங்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடை பெற்றது.
தேசிய செயற்குழு கூட்டம்
டிசம்பர் 1-ம் தேதி சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு கோழிக்கோடு ‘லீக் ஹவுஸ்’ சி.எச். முஹம்மது கோயா நினைவரங்கில் சட்ட திருத்தக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சட்டவிதிகளில் செய்யப் பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவா தித்து முடிவுகள் எடுக்கப்பட் டன.
இக்கூட்டத்தில் தேசியத் தலைவர் இ.அஹமது, பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சட்டதிருத் தக்குழு உறுப்பினர்களான இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., தமிழக வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், குஜராத் வழக்கறிஞர் ஹாஷிம் குரைஷி, கேரள வழக்கறிஞர் உம்மர் எம்.எல்.ஏ., ஆகியோரும்,
தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், தமிழக பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., உள் ளிட்டோரும் கலந்து கொண்ட னர்.
பின்னர், மாலை 4 மணிக்கு கோழிக்கோடு நடக்காவுவில் உள்ள ஈஸ்ட் அவென்யூ ஹோட்டல் அரங்கில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற் றது.
தேசியத் தலைவர் இ.அஹது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 2008 முதல் 2012 ஆண்டு வரையிலான நான் காண்டு அறிக்கையையும், தணிக்கை செய்யப்பட்ட நான்காண்டு வரவு – செலவு அறிக்கையையும் தாக்கல் செய் தார். அதை செயற்குழு அங்கீக ரித்தது.
பின்னர் தலைவர் இ. அஹமது சாஹிப் தேசிய செயற் குழுவில் முன்மொழியப்படும் தீர்மானங்கள் குறித்தும், இயக்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத் துக்கூறினார். அதனையும் கூட்டம் அங்கீகரித்தது.
நடந்து முடிந்துள்ள மாநிலங் களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல்களையும், தேர்தல் நடைபெறாத மாநிலங் களுக்கு தேசியத் தலைவர் நியமித்துள்ள நிர்வாகிகளையும் அங்கீகரித்த இக்கூட்டம் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் அங்கீ கரித்தது.
தேசிய கவுன்சில் கூட்டம்
டிசம்பர் 2-ம் தேதி ஞாயிறு காலை 10.30மணிக்கு ஹோட் டல் ஈஸ்ட் அவென்யூவில் உள்ள பெரிய அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு படைத்த தேசிய கவுன்சில் கூட்டம் துவங்கியது.
தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான இ. அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக துணைத் தலைவர் தளபதி மௌலானா ஷபீகுர் ரஹ்மான் ஹஸரத் இறைமறை ஓதினார். கேரள மாநிலத் தலைவர் பாணக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் கூட்டத்தை தொடங்கி வைத் தார்.
தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்புரையாற்றி னார். இ.அஹமது சாஹிப் தலைமையுரையாற்றினார். கட்சியின் சட்ட திருத்தங்க ளுக்கு தேசிய கவுன்சில் அங்கீகாரமளித்தது.
தலைவராக இ.அஹமது சாஹிபை முன்மொழிந்து வழிமொழிந்தோர்
வரும் நான்காண்டுக ளுக்கு தேசிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேசியத் தலைவர் பதவிக்கு இ.அஹமது சாஹிப் பெயரை கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் முன் மொழிந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் கவுஸர் ஹயாத்கான், தமிழக மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, கர்நாடக மாநிலத் தலைவர் மீர் முஹம்மது இனாம்தார், புதுச்சேரி மாநிலத் தலைவர் பொறியாளர் ரஹ்மத்துல்லா கான், மகாராஷ்டிரத்தின் ஷபீ யுல்லாகான் அன்ஸாரி,
குஜராத் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஹாஸிம் குறைஷி, பீகார் மாநிலத் தலைவர் நயீம் அக்தர், மேற்கு வங்கத் தலைவர் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் செய்யது அம்ஜத் அலி, டெல்லி குர்ரம் அனீஸ் உமர், ஆந்திர மாநிலத் தலைவர் காலித் ஜுபைதி , பஞ்சாப் மாநிலத் தலைவர் மஹ்மூது அஹமது திந்த், ராஜஸ்தானின் ஷமீம் அஹமது ஆகியோர் வழி மொழிந்தனர்.
வேறு யார் பெயரும் முன்மொழியப்படுகிறதா என கூட்டத்தை நெறிப்படுத்திய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேட்டபோது இல்லை என்று ஒருமுகமாக பதிலளித்த கவுன்சில் கூட்டம் பலத்த தக்பீர் முழக்கத்தோடு இ.அஹமது சாஹிபை தேசியத் தலைவராக ஒருமனதாக அங்கீகரித்தது. மற்ற நிர்வாகிகளை தலைவர் இ. அஹமது சாஹிப் அறிவித்தார்.
தேசிய பொதுச் செயலாளராக பேராசிரியர் கே.எம்.கே.
தேசிய பொதுச் செயலாள ராக தமிழக மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொருளாளராக கேரள மாநில அமைச்சர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி பெயரும் அறி விக்கப்பட்ட போது அரங்கமே தக்பீர் முழக்கத்தில் அதிர்ந்தது. தேசிய துணைத் தலைவர் களாக உத்தரப்பிரதேச வழக் கறிஞர் மீரட் இக்பால் அஹமது, கர்நாடகத்தின் தஸ்தகீர் இபுராஹீம் ஆகா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
தேசியச் செயலாளர்களாக கேரளத்தின் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அப்துஸ் ஸமது ஸமதானி எம்.எல்.ஏ., டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், மேற்கு வங்கத்தின் ஷாஇன்ஷா ஜஹாங்கீர் ஆகி யோர் பெயர்கள் அறிவிக்கப் பட்டன.
தேசிய துணைச் செயலாளர் களாக மகாராஷ்டிர நாக்பூர் ஷமீம் சாதிக், உத்தரப்பிரதேசம் லக்னோ டாக்டர் மத்தீன்கான், பெங்களுர் சிராஜ் இபுராஹீம் சேட், தமிழ்நாட்டின் எச். அப்துல் பாஸித் (முன்னாள் எம்.எல்.ஏ.,) ராஜஸ்தான் ஷர்புத்தீன் அன் ஸாரி ஆகியோர் பெயர்களை யும் தலைவர் இ.அஹமது சாஹிப் அறிவித்தார்.
கூட்டம் ஒருமனதாக தக்பீர் முழக்கி அவர்கள் தேர்வை அங்கீகரித்தது.
தேசிய புதிய நிர்வாகிகளை வாழ்த்தி காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார். தேசியப் பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி புதிய நிர்வாகி கள் சார்பில் உரையாற்றினார். தேசியச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக