AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 3 டிசம்பர், 2012

காசோலை கையொப்பம் மாறினாலும் குற்றவியல் நடவடிக்கை – உச்சநீதிமன்றம்!


புதுடெல்லி:வங்கியில் அளித்த கையொப்பமும், காசோலைகளில் இடப்படும் கையொப்பமும் மாறுபட்டு இருந்தாலும் அந்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில் வழங்கப்படும் காசோலை மீதுதான் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம் பொருந்தாத காரணத்துக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று தெரிவித்திருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.தாகுர், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்தது. வங்கியிடம் அளித்த கையொப்பத்துக்கு மாறாக காசோலைகளில் கையொப்பமிடும் நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக