AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 29 டிசம்பர், 2012

காட்டுமன்னார்கோவில், சிதம்பரத்தில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று காலை திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் கடந்த 3 மாதங்களாக பருவமழை பெய்யாததால் பயிரிடப்பட்ட விளை நிலங்களில் பயிர்கள் கருகின. 
சில பகுதிகளில் பொதுமக்கள் பயிரிடப்பட்ட வயல்களில் ஆடு, மாடுகளை மேய்த்தனர். தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரி சாலை மறியல்கள், உருவபொம்மை எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. மழை வேண்டி யாகங்கள், சிறப்பு பூஜைகள் ஆகியவையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்படுவதை அறிந்து விவசாயிகள் கவலையுற்ற நிலையில் நேற்று அதிகாலை கனமழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகின்றனர். 

இயற்கை தொடர்ந்து 10 தினங்களுக்கு இந்த மழை பெய்தால் எப்படியும் பயிர்களை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் அதிகாலை முதல் வானம் இருண்டு மேகம் மூடத்துடன் காணப்பட்டது. காலையில் சிதம்பரம், குமராட்சி, அண்ணாமலைநகர், புவனகிரி, சேத்தியாதோப்பு, வல்லம்படுகை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. மதியம் லேசான மழை தொடர்ச்சியாக பெய்தது. வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலையில் இப்பகுதியில் பயிர்கள் காய்ந்து கருகி விளை நிலங்கள் வெடித்தும் வந்தன. இந்த லேசான மழை தரையை நனைத் தாலும், விளை நிலைங் களையும் நனைத்துள்ளது. இதனால் நெற்பயிர்களுக்கு மிகவும் குறைந்த அளவு தண்ணீர் கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. வேதனையில் இருந்த விவசாயிகளுக்கு இந்த மழை மனநிம்மதி அடைய செய்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக