AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 17 டிசம்பர், 2012

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக போராட்டம் நடத்தப்படும் தமுமுக தீர்மானம்


லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டம் 15.12.2012 மாலை நடைப்பெற்றது.
தமுமுக, மமக கடலூர் {தெர்கு} மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் தலைமை தாங்கினார் முஹம்மது மாசூக் கிராத் ஓதினார் தமுமுக மாவட்ட செய்லாளர் என்.அமானுல்லா, மமக மாவட்ட செயலாளர் ஏ. யாசர் அரபாத், தமுமுக, மமக மாவட்ட பொருளாலர் முஹம்மது அய்யூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவுலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி தமுமுக வின் பணி பற்றி உரையாற்றினார்.
பொதுக்குழு கூட்டதில் மாவட்ட துனை , நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
பொதுக்குழு கூட்டதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1, லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக சில தடைகள் உள்ளதால் அதை தகர்தெரிய உணர்வுமிகு  போராட்டம் நடத்தப்படும்.
2,லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் புதிய வணிக வளாக கடைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய இப் பொதுக்குழு லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது.
3, கருத்துரிமை எழுத்துரிமையை நாம் மதிக்கிறோம் அது கண்ணிய மானதாக இருக்க வேண்டும். சமீபத்தில் லால்பேட்டை இணைய தளங்களில் உலமாக்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டவர்களை இப் பொதுக்குழு வன்மையாக கன்டிக்கிறது .

Thanks lalpet.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக