• திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். பொதுச்செயலாளரிடம் நேரில் உறுதி செய்தார் தாணு.
    துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க …
    வேண்டும் என்று தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
    • திருத்தப்பட்ட துப்பாக்கி திரைபடம். பொதுச்செயலாளரிடம் நேரில் உறுதி செய்தார் தாணு.துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.அதனை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு அது குறித்த விவரங்களை சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஐ சந்தித்து விளக்கி உள்ளனர். இன்று மாலை மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியை சந்தித்த தயாரிப்பாளர் தாணு அது குறித்த விவரங்களை ஒப்படைத்தார். அவருக்கு காவி பயங்கரவாதம் குறித்து பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய மக்கள் உரிமை பிரதிகளை மமக பொதுச்செயலாளர் கையளித்தார். அதன் பிறகு நடந்த உரையாடலில் காவி பயங்கரவாதம் குறித்தும், முஸ்லிம்கள் எப்படியெல்லாம் பொய் பலிக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்து தாணுவிடம் விவரமாக விளக்கப்பட்டது.அப்போது தாணுவின் அலைபேசியில் வந்த இயக்குனர் சீமான், பொதுச்செயலாலரிடம் இப்படத்தினால் ஏற்பட்ட தவறுகளுக்காக தனது வருத்தத்தையும், கவலையையும் பகிர்ந்து கொண்டார். இனி தமிழ் திரைப்படங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு காட்சிகள் வெளிவராமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டார்.இதனிடையே திருத்தப்பட்ட படத்தின் காட்சிகளை உறுதி செய்வதற்காக நாளை மதியம் 2 மணிக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த சந்திப்பு குறித்த விவரங்களை கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சகோதரர்கள் ஜே.எஸ். ரிபாயி, அப்துல் சமது, அ. ச. உமர் பாருக், ஹனிபா ஆகியோரிடம் அங்கிருந்தவாறே பகிர்ந்து கொண்ட பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இதை மற்ற அமைப்புகளிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொண்டார்.
    அதனை ஏற்று சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு அது குறித்த விவரங்களை சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஐ சந்தித்து விளக்கி உள்ளனர். இன்று மாலை மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியை சந்தித்த தயாரிப்பாளர் தாணு அது குறித்த விவரங்களை ஒப்படைத்தார்.

    அவருக்கு காவி பயங்கரவாதம் குறித்து பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய மக்கள் உரிமை பிரதிகளை மமக பொதுச்செயலாளர் கையளித்தார்.
    அதன் பிறகு நடந்த உரையாடலில் காவி பயங்கரவாதம் குறித்தும், முஸ்லிம்கள் எப்படியெல்லாம் பொய் பலிக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்து தாணுவிடம் விவரமாக விளக்கப்பட்டது.
    அப்போது தாணுவின் அலைபேசியில் வந்த இயக்குனர் சீமான், பொதுச்செயலாலரிடம் இப்படத்தினால் ஏற்பட்ட தவறுகளுக்காக தனது வருத்தத்தையும், கவலையையும் பகிர்ந்து கொண்டார். இனி தமிழ் திரைப்படங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு காட்சிகள் வெளிவராமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டார்.
    இதனிடையே திருத்தப்பட்ட படத்தின் காட்சிகளை உறுதி செய்வதற்காக நாளை மதியம் 2 மணிக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
    இந்த சந்திப்பு குறித்த விவரங்களை கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சகோதரர்கள் ஜே.எஸ். ரிபாயி, அப்துல் சமது, அ. ச. உமர் பாருக், ஹனிபா ஆகியோரிடம் அங்கிருந்தவாறே பகிர்ந்து கொண்ட பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இதை மற்ற அமைப்புகளிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுகொண்டார்