AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இதுவரை 19 லட்சம் பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் 20க்குள் பெயர் சேர்க்கலாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் 20ம் தேதி கடைசி நாள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்டு அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகம், அங்கீகரிக்கப்பட்ட வாக்கு சாவடி மையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான படிவங்கள் அங்கேயே வழங்கப்பட்டன. இதனால், பெரும்பாலானவர்கள் அங்கேயே படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
பூர்த்தியான படிவத்தை வழங்க வரும் 20ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 18 வயது பூர்த்தியாகி வரைவு வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8,ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து தகுந்த ஆவணத்துடன் வரும் 20ம் தேதி வரை வழங்கலாம். இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூறியதாவது: கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் அதிக எண்ணிக்கையில் வாக்கா ளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய 1 லட்சத்து ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முகவரி மாற்றம் செய்ய 86 ஆயிரம் பேரும், திருத்தம் செய்ய 1.70 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி வரை வழங்கலாம். அதைத் தொடர்ந்து ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும். வாக்கு சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அடையாள அட்டையை பெற்று கொள்ள லாம். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக