AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 30 அக்டோபர், 2012

கடலூர் மாவட்டத்தில் பரவுகிறது வைரஸ் காய்ச்சல் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளி வருகை அதிகரிப்பு


கடலூர், :  கடலூர் மாவட்டத்தில் பரவு வரும் வைரஸ் காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு சித்த மருத்துவத்தில் உருவாக்கப்படும் நிலவேம்பு குடி நீருக்கு (சூப்புக்கு) டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
/
மாறி வரும் சீதோஷ்ணம் மட்டுமின்றி கொசு, பன்றி, பறவைகளின் மூலமும் பல்வேறு நோய்கள் பரவி வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சுகாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலோங்கி வருகிறது. ஆனாலும் நோய் தடுப்பு நடவடிக்கை என்பது கைநழுவிய காட்சியாகவே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் மாவட்டத்தில் முதன்மையாக இல்லையென்றாலும் நோய்களுக்கான அறிகுறியாக உள்ள வைரஸ் காய்ச்சல் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பிரதானமாக உருவெடுத்துள்ளது.

/
மாவட்டத்தில் உள்ள வட்ட அளவிலான மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பகுதி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடந்த ஒரு வார காலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீர்வு காண படையெடுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 40 சதவீதம் உயர்வு கண்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
/
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள நாள்தோறும் 500 முதல் 900 புறநோயாளிகள் வருகை இருக்கும். உள்நோயாளிகள் பிரிவில் படுக்கை வசதி 600 நோயாளிகளுக்கு உள்ளது.
/
இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் தாக்கத்தில் தவிக்கும் நோயாளிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக கடந்த சில நாடகளாக காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகள் சுமார் 1,500 பேர் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளதாக அரசு மருத்துவமனை தகவல் பட்டியல் தெரிவிக்கிறது.
/
நேற்று ஒரே நாளில் 119 பேர் வட்ட அளவிலான அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொள்ள உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர்.மனோகரன் தெரிவித்தார்.
/
இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு முதல் கட்டமாக மாத்திரை மட்டுமே வழங்கப்படுகிறது. ரத்த பரிசோதனை என்பத தீவிர காய்ச்சலுக்கு மட்டுமே உட்படுத்தப்படுகிறது. நோயாளிகள் குவிந்து வருவதால் மருத்துவமனை வளாகம் பரபரப்புக்கு வழிவகுத்து நிற்கிறது.
/
இந்நிலையில் அரசு மருத்துமனைகளில் உள்ள ஆயுர்வேத மருத்துவ பிரிவில் நோய் எதிர்ப்பு சக்தியாகவும், டெங்கு, சிக்குன்குன்யா உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களுக்கு மருந்தாகவும் நிலவேம்பு குடிநீர் (சூப்) வழங்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் இதனை பருக நோய் பாதித்தவர்களும், பாதிப்பை விரட்ட நினைப்பவர்களும் படையெடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடலூர் அரசு மருத்துவமனையில் டிமாண்ட் ஏற்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
/
இது குறித்து அரசு சித்த மருத்துவர் டாக்டர்.செந்தில்குமார் கூறுகையில்- நில வேம்பு குடிநீர் வெட்டிவேர், விலாமிர்சி வேர், சந்தனம், சுக்கு, மிளகு கொண்ட கலவையாகும். குறிப்பிட்ட அளவு தண்ணீரில் சுட வைத்து வடிகட்டி பின்னர் வழங்கப்படுகிறது. அனைத்து வட்ட, ஆரம்ப, பகுதி சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்.
/
தற்பொழுது மக்கள் மத்தியில் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த நிலவேம்பு சூப்புக்கு கூடுதல் வரவேற்பு உள்ளது. இது பவுடராகவும் வழங்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிகாட்டுவதால் மக்கள் இதனை பெற்று பயன்பெறலாம் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக