சமிபத்தில் லால்பேட்டை இணைய தலத்தில் வெளியான டெங்கு காய்ச்சல் பற்றிய சுகாதாரத்தை பற்றிய ஆரோகியமான  கட்டுரை படித்தேன்
இந்த விஷயம் பற்றி  பெரும்பாலும் வெளிநாட்டில் அல்லது வெளியூர் களில் வசிக்கும் லால்பேட்டை வாசிகள் தான் கவலை படுவதை நம்மால் உணரமுடிகின்றது,
சுற்று புற சுகாதாரத்தை அரசுக்கு இருக்கும் பொறுப்பை விட பொதுமக்களாகிய நமக்கு தான்  அதிகம் பொறுப்பு இருகின்றது

நமது தமிழக அரசு ஆடுகள் அறுக்கும் இடம் சுகாதாரமாக இருக்கவும் அதன் கழிவுகள் பொதுமக்களுக்கு இடையூர் இல்லமால் அப்புறபடுத்துவது மட்டும் அல்லாமல் அணைத்து சுகாதார அம்சங்களை பின்பற்றி  இத்தகைய ஆடு வதை கூடங்களை நமது வூரில்
அமைத்து இருகின்றது ஆனால் ஆடுகள் அந்த இடத்தில அந்த விதிமுறைக்கு கட்டு பட்டு அருக்கபடுவது இல்லை அதற்கு நான் இணைத்துள்ள புகைப்படங்கள்

உங்களுக்கு ஆதாரமாய் இருக்கும் ,ஆடுகள் வெளியில் அறுக்கப்படுகின்றன ,கழிவுகள் வெளியில் கொட்டப்படுகின்றன,இதை ஆய்வு செய்ய சுகாதார அதிகாரி தினமும் வந்து செல்கின்றார் அவர் எப்படி ஆய்வு செயிகின்றார் என்பது அரசுக்கும் ஆடு அறுக்கும் நபருக்கும் தான் தெரியும் , மூன்று மாதம் முன்பு அருகமாயில் வாசித்த ஒரு பெண்மணிக்கு மர்மகாச்சளால் பதிக்க பட்டது எதனை பேருக்கு தெரியும்?
  மேலும் இந்த இடம் ஸ்கூல் தெரு கடைசியில் வேம்பன்னர் குளக்கரையில் அமைந்து இருகின்றது  இது நமது பேரூர் ஆச்சி மன்ற தலைவருக்கு தெரியாத? அல்லது நமது வார்டு உருபினர்களுக்கு தெரியாத? இது போன்ற விவாதங்கள் ஊரில் உள்ள மக்கள் செய்ய வேண்டும் மேலும் இன்று அல்ஹம்துளிலாஹ் நமது கல்லூரிகளில் படிக்கும் இளைஞர் கல் நிறைய இருகின்றார்கள் இவர்கள் தான் இதை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும் சமுதாய அமைப்புகளையும் ,அரசியல் கட்சிகளையும் எதிர் பார்ப்பது சரியல்ல ,இவர்கள் தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வார்கள் ,பின்பு அவர்கள் ஒற்றுமையாக ஆகிவிடுவார்கள் ஆகையல் பொதுநலத்தை நாடும் இளைஞர் கள் இரங்கி செயல் படவேண்டும் , தமிழக அரசு  இனைய தளம் மூலம் புகார் செய்ய
இலகுவாகி உள்ளது ஆகையால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம் யாரையும் குறை கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை , சுற்றுபுறத்தை தூய்மை யாக வைப்போம்!
 வரும் முன் காப்போம் .
நஜீர் அஹமது
அபு தாபி
ஐக்கிய அரபு அமீரகம் .